உள்ளூர் செய்திகள்

சிவப்பு கொய்யா விற்பனைக்காக வைக்கப்பட்டுள்ள காட்சி.

உடுமலையில் சிவப்பு கொய்யாப்பழ விற்பனை அமோகம்

Published On 2022-07-22 17:07 IST   |   Update On 2022-07-22 17:07:00 IST
  • வியாபாரிகள் உடுமலையில் கொய்யா விற்பனையில் ஈடுபட்டுள்ளனர்.
  • கொய்யா பழங்களை பொதுமக்கள் அதிகம் விரும்பி வாங்கி செல்கின்றனர்.

உடுமலை:

உடுமலை ஆயக்குடி மற்றும் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த கொய்யாப்பழ வியாபாரிகள் உடுமலையில் கொய்யா விற்பனையில் ஈடுபட்டுள்ளனர். கொய்யா இரண்டு வகையாக உள்ளது. ஒன்று சிவப்பு மற்றொன்று வெள்ளைபழங்கள். தற்போது சிவப்பு கொய்யாவுக்கு அதிக டிமாண்ட் உள்ளது.

பொதுமக்கள் வெள்ளை கொய்யாவை விட சிவப்புக் கொய்யாவை வாங்குவதில் அதிக ஆர்வம் காட்டுகின்றனர். ஆயக்குடி பகுதியில் இருந்து சிவப்பு கொய்யா அதிக அளவு உடுமலைக்கு வியாபாரிகளால் கொண்டு வரப்படுவதால் சிவப்பு கொய்யாப்பழங்களை வாங்குவதில் பொதுமக்கள் ஆர்வம் காட்டுகின்றனர்.

மேலும் கொய்யாப்பழம் சர்க்கரை நோய் மற்றும் செரிமான பிரச்சனைகளுக்கு பயன்படுவதால் கொய்யாப்பழங்களை வாங்குவதில் பொதுமக்கள் ஆர்வம் காட்டுகின்றனர். சிவப்பு கொய்யா ஒரு கிலோ ரூ.100 க்கும், வெள்ளை கொய்யா ரூ.50க்கும் விற்பனை செய்யப்படுகிறது என வியாபாரிகள் தெரிவித்தனர்.

இதுகுறித்து ஆயக்குடியில் இருந்து தினசரி கொய்யாப்பழங்களை விற்பனைக்காக உடுமலை கொண்டுவரும் சுரேஷ் என்பவர் கூறியதாவது:-கொய்யாப்பழங்கள் ஆயக்குடியில் இருந்து தினசரி உடுமலை பகுதியில் கொண்டு வந்து விற்பனை செய்கிறோம். இதில் வெள்ளை கொய்யாவை விட சிவப்பு கொய்யா பழங்களை பொதுமக்கள் அதிகம் விரும்பி வாங்கி செல்கின்றனர். இது மருத்துவ குணம் உள்ளது என்றார்.

Tags:    

Similar News