உள்ளூர் செய்திகள்

போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்கள். 

உடுமலையில் ஆடுகளை கொல்லும் மர்மவிலங்குகளை பிடிக்க கோரி பொதுமக்கள் போராட்டம்

Published On 2022-06-13 11:03 GMT   |   Update On 2022-06-13 11:03 GMT
  • மர்மவிலங்குகள் கடித்தும் சில ஆடுகளை இழுத்து சென்றும் விடுகின்றது.
  • பொதுமக்கள் உடுமலை தாலுகா அலுவலகம் முன்பு இன்று போராட்டத்தில் ஈடுபட்டனர்.

உடுமலை:

திருப்பூர் மாவட்டம் உடுமலை பெரியகோட்டை மற்றும் சின்னவீரம்பட்டி பஞ்சாயத்துக்கு உட்பட்ட பகுதிகளில் விவசாயிகள் ஆடு மாடுகள் வளர்த்து வருகின்றனர். கடந்த இரண்டு மாதங்களாக ஆடுகளை மர்மவிலங்குகள் கடித்தும் சில ஆடுகளை இழுத்து சென்றும் விடுகின்றது. ஜமாபந்தியில் இது பற்றி பொதுமக்கள் புகார் தெரிவித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. கடந்த ஒரு மாதமாக 100க்கும் மேற்பட்ட ஆடுகளை மர்மவிலங்குகள் கடித்து கொன்றுள்ளன.

இந்தநிலையில் நேற்று இரவு 2 விவசாயிகளின் நிலங்களில் உள்ள ஆடுகளை மர்ம விலங்குகள் கடித்து கொன்றுள்ளன. சில ஆடுகளை இழுத்தும் சென்றுள்ளது. இதையடுத்து மர்ம விலங்கை பிடிக்க நடவடிக்கை எடுக்க கோரி அப்பகுதி பொதுமக்கள் உடுமலை தாலுகா அலுவலகம் முன்பு இன்று போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

Tags:    

Similar News