உள்ளூர் செய்திகள்

கும்பாபிஷேக விழாவில் முளைப்பாரி ஊர்வலம் நடைபெற்ற காட்சி. 

பல்லடம் அருகே ஆதி விநாயகர் கோவில் கும்பாபிஷேக விழா

Published On 2023-04-16 07:28 GMT   |   Update On 2023-04-16 07:28 GMT
  • விமான கலசம் நிறுவுதல், எண் வகை மருந்து சாத்துதல் ஆகிய நிகழ்வுகள் நடைபெற்றது.
  • கும்பாபிஷேக விழாவில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள்,பொதுமக்கள் கலந்துகொண்டனர்.

பல்லடம்:

பல்லடம் அருகே உள்ள ஆறுமுத்தாம்பாளையத்தில் ஆதி விநாயகர், சோளியம்மன் கோவில் அமைந்துள்ளது. இந்தநிலையில் கோவில் புனரமைக்கப்பட்டு கும்பாபிஷேக விழா நடைபெற்றது. கும்பாபிஷேக விழாவை முன்னிட்டு முளைப்பாரி ஊர்வலம் மேளதாளங்களுடன் கோவிலுக்கு எடுத்துவரப்பட்டது.இதைத்தொடர்ந்து விநாயகர் வழிபாடு, வாஸ்து பூஜை ,காப்பு கட்டுதல், முதற்கால யாக பூஜை துவங்கியது. திருக்குடங்கள் வேள்விசாலையில் எழுந்தருளல்,108 மூலிகை ஆகுதி, திருமுறை விண்ணப்பம், விமான கலசம் நிறுவுதல், எண் வகை மருந்து சாத்துதல் ஆகிய நிகழ்வுகள் நடைபெற்றது.

இதைத் தொடர்ந்து அதிகாலை 4 மணிக்கு இரண்டாம் கால பூஜையுடன் துவங்கி, விமான கலசங்களுக்கு புனித நீர் தெளித்து கும்பாபிஷேகம், மற்றும் ஆதி விநாயகர், சோளியம்மன், மூலமூர்த்திகளுக்கும், பரிவார மூர்த்திகளுக்கும் கும்பாபிஷேகம் நடைபெற்றது. இதைத் தொடர்ந்து பதின்மங்கலக் காட்சி, பெருந்திருமஞ்சனம், பேரொளி வழிபாடு, திருமுறை விண்ணப்பம் ஆகியவை நடைபெற்றது. தொடர்ந்து ஆதி விநாயகர், சோளியம்மனுக்கு சிறப்பு அபிஷேக அலங்கார பூஜை நடைபெற்றது. கும்பாபிஷேகத்தை முன்னிட்டு அன்னதானம் வழங்கப்பட்டது.கும்பாபிஷேக விழாவில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள்,பொதுமக்கள் கலந்துகொண்டனர்.

Tags:    

Similar News