உள்ளூர் செய்திகள்

கோப்புபடம். 

பல்லடம் அருகே கள் விற்பனை செய்த 6 பேர் கைது

Published On 2022-11-14 11:52 IST   |   Update On 2022-11-14 11:52:00 IST
  • காமநாயக்கன்பாளையம் போலீஸ் இன்ஸ்பெக்டர் ரவி தலைமையிலான போலீசார் அந்த பகுதியில் திடீர் சோதனை மேற்கொண்டனர்.
  • உடனடியாக அவர்களை கைது செய்த போலீசார் அவர்களிடம் இருந்து தலா 2 லிட்டர் கள் பறிமுதல் செய்யப்பட்டது.

பல்லடம்:

பல்லடம் அருகே,காமநாயக்கன்பாளையம் போலீஸ் நிலையத்திற்கு உட்பட்ட பகுதிகளில் கள் விற்பனை செய்வதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதன் அடிப்படையில் நேற்று காமநாயக்கன்பாளையம் போலீஸ் இன்ஸ்பெக்டர் ரவி தலைமையிலான போலீசார் அந்த பகுதியில் திடீர் சோதனை மேற்கொண்டனர். அப்போது கள்ளிப்பாளையத்தைச் சேர்ந்த வெள்ளியங்கிரி என்பவரது மகன் கங்கை அமரன் (வயது 46), குள்ளம் பாளையத்தைச் சேர்ந்த மயில்சாமி என்பவரது மகன் குமரேசன் (30), நாதே கவுண்டம்பாளையத்தைச் சேர்ந்த முத்துசாமி என்பவரது மகன் பழனிசாமி (50), அதே ஊரைச் சேர்ந்த ராஜாமணி என்பவரது மகன் கார்த்திகேயன் (42), காட்டூரைச் சேர்ந்த பொன்னுசாமி (50), வெள்ளநத்தம் பகுதியை சேர்ந்த பழனிசாமி (48) ஆகியோர் கள் விற்பனை செய்ததை போலீசார் கண்டறிந்தனர். உடனடியாக அவர்களை கைது செய்த போலீசார் அவர்களிடம் இருந்து தலா 2 லிட்டர் கள் பறிமுதல் செய்யப்பட்டது. மேலும் 6 பேர் மீதும் வழக்கு பதிவு செய்து மேற்கொண்டு விசாரணை செய்து வருகின்றனர். 

Tags:    

Similar News