உள்ளூர் செய்திகள்

ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்றவர்கள். 

மடத்துக்குளத்தில் அ.தி.மு.க.வினர் ஆர்ப்பாட்டம்

Published On 2022-10-20 13:36 IST   |   Update On 2022-10-20 13:36:00 IST
  • நீலம்பூர் செல்வராஜ் முன்னிலையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
  • இளைஞர் இளம் பெண்கள் பாசறை காமாட்சி உட்பட பலர் கலந்து கொண்டனர்.

மடத்துக்குளம்:

எடப்பாடி பழனிசாமி மற்றும் அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் கைது செய்யப்பட்டதை கண்டித்து மடத்துக்குளம் மத்திய பேருந்து நிலையம் முன்பு திருப்பூர் கிழக்கு மாவட்ட அ.தி.மு.க. சார்பில் புறநகர் கிழக்கு மாவட்ட செயலாளர் சி.மகேந்திரன் அறிவுறுத்தலின்படிமடத்துக்குளம் பேரூராட்சி செயலாளர் நீலம்பூர் செல்வராஜ் முன்னிலையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

மடத்துக்குளம் சட்டமன்ற தொகுதி ஒன்றிய செயலாளர்கள் ஆர். பி .ஜெகநாதன், போகநாதன்,காளீஸ்வரன், சிவலிங்கம் ,பேரூர் செயலாளர்கள் அன்னதான பிரபு, சரவணன், ராமலிங்கம் ,இளைஞர் இளம் பெண்கள் பாசறை காமாட்சி உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News