உள்ளூர் செய்திகள்
புதிய தினசரி மார்க்கெட் கட்டிடம் கட்டும் பணியை அமைச்சர்கள் தொடங்கி வைத்த காட்சி. 

தாராபுரத்தில் புதிய தினசரி மார்க்கெட் கட்டிடம் கட்டும் பணி - அமைச்சர்கள் தொடங்கி வைத்தனர்

Published On 2023-03-05 04:09 GMT   |   Update On 2023-03-05 04:10 GMT
  • செய்தித்துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன் ,ஆதிதிராவிடர் நலத்துறைஅமைச்சர் என்.கயல்விழி செல்வராஜ் தொடங்கி வைத்தனர்.
  • நகராட்சி பொறியாளர் சண்முகவடிவு மற்றும் தொடர்புடைய அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

தாராபுரம்:

தாராபுரம் நகராட்சியில் கலைஞர் நகர்புற மேம்பாட்டு திட்டத்தின் கீழ் ரூ.2 கோடி மதிப்பீட்டில் புதிய தினசரி மார்க்கெட் கட்டிடம் கட்டும் பணியினை கலெக்டர் வினீத் தலைமையில் செய்தித்துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன் ,ஆதிதிராவிடர் நலத்துறைஅமைச்சர் என்.கயல்விழி செல்வராஜ் தொடங்கி வைத்தனர்.

பின்னர் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறையின் சார்பில் 62 நபர்களுக்கு 24.80 லட்சம் மதிப்பீட்டில் விலையில்லா வீட்டுமனைப்பட்டாக்களை வழங்கினர். இந்நிகழ்ச்சியில் திருப்பூர் மாநகராட்சி 4-ம் மண்டல தலைவர் இல.பத்மநாபன், தாராபுரம் நகர் மன்ற தலைவர் பாப்புகண்ணன், தாராபுரம் ஆணையாளர் ராமர், தாராபுரம் வருவாய் கோட்டாட்சியர் குமரேசன், நகராட்சி பொறியாளர் சண்முகவடிவு மற்றும் தொடர்புடைய அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News