உள்ளூர் செய்திகள்

கோப்புபடம். 

நிறுத்தப்பட்ட அரசு பேருந்தை மீண்டும் இயக்க கோரிக்கை

Published On 2023-05-08 05:55 GMT   |   Update On 2023-05-08 05:55 GMT
  • பள்ளி, கல்லூரி செல்லும் மாணவ, மாணவிகள், பொதுமக்கள் என அனைவரும் அவதியடைந்து வருகிறோம்.
  • நிறுத்தப்பட்ட அரசுப் பேருந்தை மீண்டும் இயக்க வேண்டும் என பல்லடம் பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

திருப்பூர்:

நிறுத்தப்பட்ட அரசுப் பேருந்தை மீண்டும் இயக்க வேண்டும் என பல்லடம் பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

இது குறித்து அப்பகுதி மக்கள் கூறியதாவது: -பல்லடத்தில் இருந்து ராயா்பாளையம், சிட்கோ, கவுண்டம்பாளையம், கவுண்டம்பாளையம்புதூா், மாதேஸ்வரன் நகா் வழியாக கணபதிபாளையத்துக்கு அரசுப் பேருந்து இயங்கி வந்த நிலையில் கடந்த ஒரு ஆண்டுக்கும்மேலாக அவ்வழித்தடங்களில் பேருந்து இயக்கப்படவில்லை.இதனால் பள்ளி, கல்லூரி செல்லும் மாணவ, மாணவிகள், பொதுமக்கள் என அனைவரும் அவதியடைந்து வருகிறோம்.இது குறித்து அதிகாரிகளிடம் பலமுறை முறையிட்டும் எந்தவிதமான நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.எனவே இந்த விஷயத்தில் மாவட்ட கலெக்டர் தலையிட்டு உரிய நடவடிக்கை எடுத்து, பொதுமக்களின் சிரமத்தை போக்க வேண்டும் என்றனா்.

Tags:    

Similar News