உள்ளூர் செய்திகள்

கோப்புபடம். 

அவினாசி, பல்லடத்தில் சட்டவிரோதமாக மது விற்பனையில் ஈடுபட்ட 5 பேர் கைது

Published On 2022-10-03 08:06 GMT   |   Update On 2022-10-03 08:06 GMT
  • சேடபாளையத்தை சேர்ந்த சசிகுமார்(49) என்பவரை கைது செய்து அவனிடமிருந்து 14 மதுபான பாட்டில்களை பறிமுதல் செய்தனர்.
  • அவர்களிடமிருந்து 23 பிராந்தி பாட்டில்கள் மற்றும் பணம் ரூ 10,200- பறிமுதல் செய்தனர்.

அவினாசி:

காந்தி ஜெயந்தியை முன்னிட்டு நேற்று டாஸ்மாக் மதுபானகடை விடுமுறை டாஸ்மாக் மதுபானக்கடைகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டு இருந்தது. இந்நிலையில் அவினாசி அருகே தெக்கலூர் செங்காளிபாளையம் பகுதியில் மது விற்பனை செய்யப்படுவதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதன் பேரில் அதே பகுதியை சேர்ந்த ரங்கசாமி மற்றும் சிவலிங்கம் ஆகியோரை பிடித்து விசாரித்தனர். அவர்களிடமிருந்து 23 பிராந்தி பாட்டில்கள் மற்றும் பணம் ரூ 10,200- பறிமுதல் செய்தனர். மேலும் அவினாசி பட்டறை பகுதியை சேர்ந்த மாரிமுத்து என்பவரிடமிருந்து 18 பிராந்தி பாட்டில்கள் மற்றும் பணம் ரூ. 800 ஆகியவற்றை கைபற்றி 3 பேரையும் கைது செய்தனர்.

பல்லடம் அருகே தெற்குபாளையம் பகுதியில் சட்டவிரோதமாக மதுபானம் விற்பனை நடைபெறுவதாக பல்லடம் போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது இதையடுத்து பல்லடம் இன்ஸ்பெக்டர் மணிகண்டன்,சப் - இன்ஸ்பெக்டர் கார்த்தி தலைமையிலான போலீசார் அந்தப் பகுதியில் சோதனை மேற்கொண்டனர். அப்போது தெற்குபாளையம் காட்டு பகுதியில் சட்டவிரோத மதுபானம் விற்பனை செய்து கொண்டிருந்த தெற்குபாளையம் பிராமிஸ் நகரை சேர்ந்த பாலசந்தர்( 36) என்பவனை கைது செய்து அவனிடமிருந்து 47 மதுபான பாட்டில்களை பறிமுதல் செய்தனர்.இதே போல பல்லடம் அருகே உள்ள சின்னக்கரையில் சட்டவிரோதமாக மதுபானம் விற்பனை செய்த சேடபாளையத்தை சேர்ந்த சசிகுமார்(49) என்பவரை கைது செய்து அவனிடமிருந்து 14 மதுபான பாட்டில்களை பறிமுதல் செய்தனர்.

Tags:    

Similar News