உள்ளூர் செய்திகள்

கோப்புபடம்.

உடுமலை சட்டமன்றத்தொகுதியில் 20 சதவீத வாக்காளர்களின் அடையாள அட்டையுடன் ஆதார் எண் இணைப்பு

Published On 2022-08-26 09:03 GMT   |   Update On 2022-08-26 09:03 GMT
  • 2 லட்சத்து 63 ஆயிரம் வாக்காளர்கள் உள்ளனர்.
  • 295 வாக்குச்சாவடிகள் உள்ளன.

உடுமலை :

வாக்காளர் அடையாள அட்டையுடன் ஆதார் எண்ணை இணைக்கும் படி மத்திய அரசு கூறியுள்ளது. அதன்படி இந்த பணிகள் கடந்த 1 ந்தேதி தொடங்கியது. உடுமலை சட்டமன்ற தொகுதியில் சுமார் 2 லட்சத்து 63 ஆயிரம் வாக்காளர்கள் உள்ளனர்.

மொத்தம் 295 வாக்குச்சாவடிகள் உள்ளன. ஒவ்வொரு வாக்கு சாவடிக்கு உட்பட்ட பகுதியிலும் அந்தந்த வாக்குச்சாவடி நிலை அலுவலர்கள் வீடு வீடாகச் சென்று வாக்காளர் அடையாள அட்டையுடன் ஆதார் எண்ணை இணைக்கும் பணியில் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். இதற்கான சிறப்பு முகாம் உடுமலை நகராட்சி அலுவலகத்தில் நடந்தது. முகாமை ஆடியோ ஆர் .ஜஸ்வந்த் கண்ணன் தொடங்கி வைத்தார். உடுமலை நகராட்சி தலைவர் மத்தின், நகராட்சி ஆணையாளர் சத்தியநாதன், தேர்தல் துணை தாசில்தார் சாந்தி உள்ளிட்டோர் உடன் இருந்தனர். முகாமிற்கு வந்திருந்த பொதுமக்கள் 50 பேருடைய வாக்காளர் அடையாள அட்டையுடன் ஆதார் எண் இணைக்கப்பட்டது.

உடுமலை அரசு கலைக் கல்லூரியில் 32 மாணவ மாணவிகளின் வாக்காளர் அடையாள அட்டையுடன் ஆதார் இணைக்கப்பட்டது. உடுமலை சட்டமன்ற தொகுதியில் இதுவரை 20 சதவீத வாக்காளர்கள் வாக்காளர் அடையாள அட்டையுடன் ஆதார் எண் இணைக்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

Tags:    

Similar News