உள்ளூர் செய்திகள்

 சாமிநாதனுக்கு விபத்து உதவித்தொகைக்கான ஆணையை சப்-கலெக்டர் ஸ்ருதன் ஜெய் நாராயணன் வழங்கிய காட்சி. 

மக்கள் தொடர்பு முகாமில் 26 மனுக்களுக்கு தீர்வு

Published On 2022-11-24 05:12 GMT   |   Update On 2022-11-24 05:12 GMT
  • 68 மனுக்கள் வரப்பெற்றதில் 26 மனுக்களுக்கு தீர்வு காணப்பட்டது.
  • உதவித்தொகையான மாதம் ரூ. 1000க்கான உத்தரவு நகலை வழங்கினார்.

பல்லடம்  : 

பல்லடம் அருகே உள்ள பொங்கலூர் தொங்குட்டி பாளையம் ஊராட்சியில் தமிழக அரசின் மக்கள் தொடர்பு முகம் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில், ஊராட்சி மன்ற தலைவர் பிரியா நடராஜன் வரவேற்றார். பொங்கலூர் ஒன்றிய குழுத் தலைவர் வக்கீல் எஸ். குமார், துணைத் தலைவர் அபிராமி அசோகன், ஒன்றிய கவுன்சிலர் ஜோதிபாசு ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில் மாவட்ட சப்- கலெக்டர் ஸ்ருதன் ஜெய் நாராயணன் தலைமை தாங்கி நலத்திட்ட உதவிகள் வழங்கினார்.

இந்த நிகழ்ச்சியில் மொத்தம்68 மனுக்கள் வரப்பெற்றதில் 26 மனுக்களுக்கு தீர்வு காணப்பட்டது. மீதம் 42 மனுக்கள் பரிசீலனையில் உள்ளது. நிகழ்ச்சியின் போது விபத்தில் காயம் அடைந்த தொங்குட்டி பாளையத்தைச் சேர்ந்த சாமிநாதன் (வயது 61) என்பவர் ஆட்டோவில் இருந்து இறங்கி வர முடியாமல் அங்கேயே அமர்ந்திருந்தார். இதனை அறிந்த சப் கலெக்டர் ஸ்ருதன் ஜெய் நாராயணன் நேரடியாக ஆட்டோவின் அருகில் சென்று அவருக்கு விபத்து உதவித்தொகையான மாதம் ரூ. 1000க்கான உத்தரவு நகலை வழங்கினார். தொடர்ந்து அவர் முகாமில் கலந்து கொண்டு பேசும்போது, கல்வியின் அவசியம் குறித்து பெற்றோர்கள் குழந்தைகளுக்கு தெரிவிப்பதுடன் அவர்களை தினசரி கண்காணித்து ஊக்கப்படுத்த வேண்டும். குப்பை இல்லாத ஊராட்சியாக மாற்றுவதற்கு பொதுமக்கள் ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் என்று தெரிவித்தார். இந்த மக்கள் தொடர்பு முகாமில் ஒன்றிய கவுன்சிலர் பாலுசாமி, ஊராட்சி துணைத் தலைவர் பத்மா ஆனந்தன், பொங்கலூர் வட்டார மருத்துவ அலுவலர் டாக்டர். சுந்தரவேல், தனி தாசில்தார் (ஊட்டச்சத்து) கோவிந்தராஜ், (சமூக பாதுகாப்பு திட்டம்) பாபு, வருவாய் ஆய்வாளர் மா.கருணாநிதி, கிராம நிர்வாக அலுவலர் ரமேஷ், ஊராட்சி செயலர் ஆனந்த் மற்றும் கால்நடை, தோட்டக்கலைத்துறை, வேளாண்மை துறை, சுகாதாரத்துறை உட்பட பல்வேறு துறை அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News