உள்ளூர் செய்திகள்

பல்லடம் தாலுகா அலுவலகத்தில் புகார் அளித்த வீட்டுமனை உரிமையாளர்கள்.

நடுரோட்டில் வீட்டுமனை இடம் - சகோதரர்கள் அதிர்ச்சி

Published On 2022-07-29 04:51 GMT   |   Update On 2022-07-29 04:51 GMT
  • கரடிவாவி ரோட்டில் 13.5 சென்ட் வீட்டுமனை இடத்தை கடந்த 2016 ஆம் ஆண்டு வாங்கியுள்ளனர்.
  • ரோட்டில் வீட்டுமனை இடம் உள்ளதாக தெரிவித்த கிராம நிர்வாக அலுவலர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.

பல்லடம் :

கோவை மாவட்டம் சூலூர் தாலுகா வி.மேட்டூர் கிராமத்தை சேர்ந்தவர் ராஜசேகரன் (வயது 43).இவரது சகோதரர் வெங்கடாசலம்(40). சகோதரர்கள் இணைந்து அதே பகுதியை சேர்ந்த ராமச்சந்திரன் என்பவரிடமிருந்து, திருப்பூர் மாவட்டம் பல்லடம் ஒன்றியம் க.கிருஷ்ணாபுரம் ஊராட்சி காமநாயக்கன்பாளையம் கரடிவாவி ரோட்டில் 13.5 சென்ட் வீட்டுமனை இடத்தை கடந்த 2016 ஆம் ஆண்டு வாங்கியுள்ளனர்.

தற்போது வீடு கட்டுவதற்காக, இடத்தை அளவீடு செய்ய கிருஷ்ணாபுரம் கிராம நிர்வாக அலுவலர் பூங்கொடியிடம் மனு அளித்தனர். நிலத்தை அளவீடு செய்ய வந்த கிராம நிர்வாக அலுவலர் பூங்கொடி காமநாயக்கன்பாளையம் - கரடிவாவி ரோட்டின் மையப்பகுதியில் அளவீடு செய்து இதுதான் உங்களது வீட்டுமனை இடம் என கூறியுள்ளார். இதனால் அதிர்ச்சியடைந்த அவர்கள், தங்களது நிலத்தை முறையாக அளவீடு செய்து தரக்கோரி பல்லடம் தாலுகா அலுவலகத்திற்கு புகார் அளிக்க வந்தனர். தாசில்தார் இல்லாததால் மண்டல துணை தாசில்தாரிடம் மனு அளித்து தங்களது இடத்தை உரிய அளவீடு செய்து ஒப்படைக்க வேண்டுமாறு வேண்டுகோள் விடுத்தனர். ரோட்டில் வீட்டுமனை இடம் உள்ளதாக தெரிவித்த கிராம நிர்வாக அலுவலர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக் கொண்டனர்.

இதுகுறித்து கிராம நிர்வாக அலுவலரிடம் விளக்கம் கேட்க முயன்றபோது அவர் செய்தியாளரின் அழைப்பை ஏற்கவில்லை. இந்த சம்பவத்தால் தாலுகா அலுவலகத்தில் பரபரப்பு ஏற்பட்டது.

Tags:    

Similar News