உள்ளூர் செய்திகள்

குழந்தைகள், பெண்கள் கும்மி ஆட்டம் ஆடிய காட்சி.

பவளக்கொடி கும்மியாட்டக்குழு சார்பில் கும்மி ஆட்டம் அரங்கேற்ற விழா - குழந்தைகள், பெண்கள் பங்கேற்பு

Update: 2022-09-26 10:45 GMT
  • 100-க்கும் மேற்பட்டோர் கால்களில் சலங்கை அணிந்தபடி கும்மி ஆட்டம் ஆடியது அனைவரையும் கவர்வதாக அமைந்திருந்தது.
  • ஆசிரியர்களை பாராட்டி நினைவு பரிசுகளும், பயிற்சி பெற்றவர்களுக்கு சான்றிதழும் வழங்கப்பட்டது.

அனுப்பர்பாளையம் :

கொங்கு மண்ணின் பாரம்பரிய கலையான கும்மி ஆட்ட அரங்கேற்ற விழா ஆண்டுதோறும் திருப்பூர் பாளையக்காடு பவளக்கொடி கும்மி ஆட்டக்குழு சார்பில் நடைபெற்று வருகிறது. இந்த ஆண்டு 35-வது கும்மி ஆட்டம் அரங்கேற்ற விழா அந்த பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் நடைபெற்றது. இறைவணக்கத்துடன் தொடங்கிய இந்த நிகழ்ச்சியில் குழந்தைகள், பெண்கள் உள்பட 100-க்கும் மேற்பட்டோர் கால்களில் சலங்கை அணிந்தபடி கும்மி ஆட்டம் ஆடியது அனைவரையும் கவர்வதாக அமைந்திருந்தது. வாழ்த்து பாடல் மற்றும் நன்றியுரையுடன் நிகழ்ச்சி நிறைவடைந்தது.

நிகழ்ச்சியையொட்டி ஆசிரியர்களை பாராட்டி நினைவு பரிசுகளும், பயிற்சி பெற்றவர்களுக்கு சான்றிதழும் வழங்கப்பட்டது. முன்னதாக பாளையக்காடு சக்தி மாரியம்மன், விநாயகர் கோவில்களில் சிறப்பு பூஜை செய்யப்பட்டு, பெண்கள் ஊர்வலமாக வந்து கும்மியாட்ட நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர். நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை பவளக்கொடி கும்மி ஆட்டக்குழு மற்றும் பாளையக்காடு ஊர் பொதுமக்கள் செய்திருந்தனர்.

Tags:    

Similar News