உள்ளூர் செய்திகள்

மாணவர்க்கு ஸ்டெதாஸ்கோப், மற்றும் மருத்துவர் அங்கி, ஆகியவற்றை வழங்கி ஊக்கப்படுத்திய காட்சி.

அரசு பள்ளி மாணவர் அரசு இட ஒதுக்கீட்டின் மூலம் மருத்துவம் படிக்க தேர்வு - அமைச்சர் மு.பெ.சாமிநாதன் ஊக்கப்படுத்தினார்

Published On 2023-07-31 06:43 GMT   |   Update On 2023-07-31 06:43 GMT
  • எம்.எம்.பி.எஸ். படிப்பிற்கு தமிழ்நாடு அரசு அறிவித்த 7.5 சதவீத இட ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
  • மாணவனின் படிப்பிற்கான முழு செலவையும் தமிழக அரசு ஏற்றுக்கொள்கிறது.

திருப்பூர், ஜூலை. 31-

நடப்பு ஆண்டு எம்.எம்.பி.எஸ். படிப்பிற்கு தமிழ்நாடு அரசு அறிவித்த 7.5 சதவீத இட ஒதுக்கீட்டில் தேர்வான முத்தூர் அரசு பள்ளியில் பயின்ற மோளக்கவுண்டன்புதூரை சார்ந்த ஆறுமுகம் (நெடுஞ்சாலைத்துறையில் சாலை பணியாளராக பணியாற்றுகிறார்). அவரின் மகன் அபிஷேக் கோவை தனியார் மருத்துவக்கல்லூரியில் மருத்துவம் பயில தேர்வானார். அவரது படிப்பிற்கான முழு செலவையும் தமிழக அரசு ஏற்றுக்கொள்கிறது.

மாணவர் அபிஷேக்கிற்கு, கழக உயர்நிலை செயல்திட்ட குழு உறுப்பினர், தமிழ்நாடு அரசு தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தி துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன் ஸ்டெதாஸ்கோப், மற்றும் மருத்துவர் அங்கி, ஆகியவற்றை வழங்கி ஊக்கப்படுத்தினார்.

உடன் வெள்ளகோவில் ஒன்றிய கழக செயலாளர் சந்திரசேகரன் மற்றும் முத்தூர்பேரூர் கழக செயலாளர் செண்பகம் பாலு ஆகியோர் உள்ளனர்

Tags:    

Similar News