உள்ளூர் செய்திகள்

கோப்பு படம்.

விண்கற்கள் தேடுதல் திட்டத்தில் பங்கேற்க அரசு பள்ளி மாணவர்களுக்கு அழைப்பு

Published On 2023-09-19 07:53 GMT   |   Update On 2023-09-19 07:53 GMT
  • அரசுப்பள்ளி மாணவர்களுக்கு வழங்குவதால் இலவச பயிற்சியில் பங்கேற்க அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
  • சூரிய குடும்பத்தில் உள்ள சிறுகோள்கள் குறித்த பல்வேறு ஆய்வுகள் நடக்கின்றன.

திருப்பூர்:

ஓபன் ஸ்பேஸ் பவுண்டேஷன் சார்பில் விண்கற்கள் தேடுதல் திட்டத்தில் பங்கேற்று அவற்றிற்கு பெயர் வைக்கும் வாய்ப்பும் அரசுப்பள்ளி மாணவர்களுக்கு வழங்குவதால் இலவச பயிற்சியில் பங்கேற்க அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

அறிவியல் கல்வி நிறுவனமான ஓபன் ஸ்பேஸ் பவுண்டேஷன் சார்பில் ஆண்டுதோறும் விண்கற்களை கண்டறிவதற்கான பயிற்சி மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு வழங்கப்படுகிறது.

சர்வதேச வானியல் தேடல் கூட்டமைப்பான ஐ.எஸ்.ஏ.சி., மற்றும் நாசா இணைந்து, ஹவாயில் உள்ள பான்-ஸ்டார்ஸ் தொலைநோக்கி வாயிலாக எடுக்கப்படும் படங்களை இணையதளம் வாயிலாக அனுப்பி வைக்கப்படும்.பிரத்யேக மென்பொருள் உதவியோடு, படங்களில் இருப்பவை விண்கற்களா என மாணவர்களும், ஆசிரியர்களும் ஆராய்ந்து, நகரும் பொருட்கள் இருப்பின் மீண்டும் வானியலாளர்களுக்கு அனுப்பப்படும்.

பல நிலை பரிசோதனைகளுக்கு பின், மாணவர்கள் அனுப்பியவை விண்கற்கள் என அடையாளம் காணப்பட்டால் அதற்கு பெயர் வைக்கும் வாய்ப்பு வழங்கப்படுகிறது.

இது குறித்து ஓபன் ஸ்பேஸ் பவுண்டேஷன் உதவி அறிவியலாளர் கிரித்திகா கூறியதாவது:-

சூரிய குடும்பத்தில் உள்ள சிறுகோள்கள் குறித்த பல்வேறு ஆய்வுகள் நடக்கின்றன. விண்கற்களை கண்டறிவதன் வாயிலாக அதன் மோதலால் பூமிக்கு ஏற்படும் பாதிப்புகளை தடுக்க முடியும்.இதற்காக, வானியல் கல்வி குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்த விண்கற்கள் தேடுதல் திட்டம் கொண்டுவரப்பட்டது. இதில் அரசுப்பள்ளி மாணவர்களுக்கு இலவச பயிற்சிகள் வழங்கப்பட்டு பின் திட்டத்தில் பங்கேற்பாளர்களாக சேர்க்கப்படுவர்.நவம்பர் மாதம் ஆன்லைன் பயிற்சி வகுப்பு துவங்குவதால், ஆர்வமுள்ள மாணவர்கள், ஆசிரியர்கள் www.openspacefoundation.in என்ற இணையதளத்திலோ அல்லது 99522 09695 என்ற எண்ணிலோ தொடர்பு கொள்ளலாம்.

இவ்வாறு அவர் கூறினார்.

Tags:    

Similar News