உள்ளூர் செய்திகள்

கோப்பு படம்.

இலவச எலும்பு-மூட்டு நோய் சிகிச்சை முகாம் நாளை நடக்கிறது

Published On 2023-08-08 12:02 IST   |   Update On 2023-08-08 12:02:00 IST
  • ரோட்டரி கிளப் ஆப் திருப்பூர் ஸ்மார்ட்சிட்டி மற்றும் ஓ.எம்.எஸ். மருத்துவமனை மல்டி ஸ்பெஷாலிட்டி சென்டர் இணைந்து இம்முகாமை நடத்துகிறது.
  • ஆலோசனை மற்றும் சிகிச்சை முகாம் நாளை 9-ந்தேதி (புதன்கிழமை) காலை 9 மணி முதல் மாலை 2மணி வரை நடைபெறுகிறது.

திருப்பூர்:

ரோட்டரி கிளப் ஆப் திருப்பூர் ஸ்மார்ட்சிட்டி மற்றும் ஓ.எம்.எஸ். மருத்துவமனை மல்டி ஸ்பெஷாலிட்டி சென்டர் சார்பில் இலவச எலும்பு மற்றும் மூட்டு நோய் ஆலோசனை மற்றும் சிகிச்சை முகாம் நாளை 9-ந்தேதி (புதன்கிழமை) காலை 9 மணி முதல் மாலை 2மணி வரை திருப்பூர் பல்லடம் ரோடு வீரபாண்டி பிரிவு ஓ.எம்.எஸ். மருத்துவமனையில் நடக்கிறது.

இதில் சிறப்பு விருந்தினராக திருப்பூர் வீரபாண்டி போலீஸ் நிலைய இன்ஸ்பெக்டர் ஆனந்த் கலந்து கொள்கிறார். ஓ.எம்.எஸ்.மருத்துவமனை நிறுவனர் ரவிசந்திரன் , ரோட்டரி சங்க நிர்வாகி டாக்டர் அருள்ஜோதி ஆகியோர் கலந்து கொள்கின்றனர்.

முகாமில் 40 வயதை கடந்த ஆண்கள் மற்றும் பெண்கள், மாத விலக்கு நின்ற பெண்கள், நிரந்தர கை, கால், வலி உள்ளவர்கள், நிரந்தர முதுகு வலி உள்ளவர்கள் கலந்து கொள்ளலாம். முகாமில் கலந்து கொள்வோருக்கு இலவசமாக ரூ.1500 மதிப்புள்ள எலும்பு அடர்த்தி சோதனை செய்யப்படும். முகாமில் கலந்து கொள்ள விரும்புபவர்கள் 81100 71747 என்ற செல்போன் எண்ணில் முன்பதிவு செய்து கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

முகாமில் ரோட்டரி சங்க நிர்வாகிகள் ராஜேந்திரன், சிவக்குமார், ரங்கநாதன், இளையராஜா மற்றும் செந்தில்குமார், சண்முக சுந்தரராஜன் உள்பட பலர் பங்கேற்கின்றனர். 

Tags:    

Similar News