உள்ளூர் செய்திகள்

புதுச்சேரி கல்வித்துறையில் ஆசிரியை பணி வாங்கி தருவதாக பெண்ணிடம் ரூ.5½ லட்சம் பறிப்பு

Published On 2026-02-13 12:45 IST   |   Update On 2026-02-13 12:46:00 IST
  • சந்தேகமடைந்த துர்காதேவி, பணி ஆணையை எடுத்துக் கொண்டு புதுச்சேரி கல்வித்துறை அதிகாரிகளிடம் விசாரித்தார்.
  • போலீசார் மோசடி வழக்கு பதிவு செய்து விஜயராஜை தேடி வருகின்றனர்.

புதுச்சேரி:

புதுச்சேரி லாஸ்பேட்டை நாவற்குளம் பகுதியை சேர்ந்தவர் துர்காதேவி (வயது42). இவர் புதுச்சேரியில் உள்ள தனியார் பள்ளியில் ஆசிரியையாக பணியாற்றி வருகிறார்.

கடந்த 2015-ம் ஆண்டு துர்காதேவியுடன் படித்த பண்ருட்டியை சேர்ந்த தேவி என்பவர் உறவினர் விஜயராஜ் என்பவரை அறிமுகப்படுத்தினார். அப்போது அவர் புதுச்சேரியில் அரசு அதிகாரிகள் நிறையபேர் தனக்கு தெரியும் எனவே கல்வித்துறையில் ஆசிரியை பணி வாங்கி தருகிறேன் என துர்காதேவியுடம் கூறியுள்ளார்.

தொடர்ந்து 2018-ம் ஆண்டு அவரது வீட்டுக்கு சென்ற விஜய்ராஜ், புதுச்சேரி கல்வித்துறையில் ஆசியை பணி வாங்கி தருவதாக கூறி ரூ.4½ லட்சத்தை வாங்கி சென்றார். பின்னர் சில மாதங்களில் அவர் பணி ஆணையை கொடுத்துள்ளார்.

இதையடுத்து கடந்த 2021-ம் ஆண்டு வேலை போடபோகிறார்கள் எனக்கூறி மேலும் ரூ.88 ஆயிரம் வாங்கினார். பின்னர் ஆர்டர் தற்காலிமாக நிறுத்தப்பட்டு இருக்கிறது, விரைவில் வந்துவிடும் என விஜய்ராஜ் கூறியுள்ளார்.

இதனால் சந்தேகமடைந்த துர்காதேவி, பணி ஆணையை எடுத்துக் கொண்டு புதுச்சேரி கல்வித்துறை அதிகாரிகளிடம் விசாரித்தார்.

அப்போது அது போலியானது என தெரிய வந்தது. அதன்பிறகே அவர் பணம் மோசடி செய்யப்பட்டதை உணர்ந்தார். பின்னர் அவர் லாஸ்பேட்டை போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார் மோசடி வழக்கு பதிவு செய்து விஜயராஜை தேடி வருகின்றனர்.

Tags:    

Similar News