உள்ளூர் செய்திகள்
இலவச மருத்துவமுகாமில் பங்கேற்ற பொதுமக்கள்.
பல்லடம் நீதிமன்ற வளாகத்தில் இலவச மருத்துவ முகாம்
- குற்றவியல் நடுவர் நீதிமன்ற நீதிபதி சித்ரா முன்னிலை வகித்தார்.
- பொதுமக்களுக்கு இலவச மருத்துவ பரிசோதனைகள், ஆலோசனைகள் வழங்கப்பட்டது.
பல்லடம்:
பல்லடம் வட்ட சட்டப் பணிகள் குழு, மாவட்டப் பார்வை இழப்பு தடுப்பு சங்கம், வழக்கறிஞர் சங்கம், மெல்வின் ஜோன்ஸ் அரிமா சங்கம், மற்றும் மருத்துவமனைகள், அக்குபஞ்சர் சிகிச்சை மையம் ஆகியவை இணைந்து நடத்திய இலவச பொது மருத்துவ முகாம் பல்லடம் ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் நடைபெற்றது.
இந்த முகாமுக்கு சார்பு நீதிமன்ற நீதிபதி மேகலா மைதிலி தலைமை தாங்கினார். குற்றவியல் நடுவர் நீதிமன்ற நீதிபதி சித்ரா முன்னிலை வகித்தார். இதில் வழக்கறிஞர்கள், நீதிமன்ற ஊழியர்கள் மற்றும் பொதுமக்களுக்கு இலவச மருத்துவ பரிசோதனைகள், ஆலோசனைகள் வழங்கப்பட்டது.