உள்ளூர் செய்திகள்

கோப்புபடம்.

கால்நடை மருத்துவர் மீது விவசாயிகள் புகார்

Published On 2023-03-02 17:22 IST   |   Update On 2023-03-02 17:22:00 IST
  • கால்நடைகளுக்கு மாவட்ட அளவிலான கோமாரி நோய் தடுப்பூசி முகாம் நடைபெற்றது.
  • தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்க மாவட்ட கொள்கை பரப்பு செயலாளர் புகார் மனு அளித்தார்.

பல்லடம் :

பல்லடம் அருகே உள்ள வடக்கு அவிநாசி பாளையத்தில், கால்நடைகளுக்கு மாவட்ட அளவிலான கோமாரி நோய் தடுப்பூசி முகாம் நடைபெற்றது. இந்த முகாமை துவக்கி வைக்க வந்த திருப்பூர் மாவட்ட கலெக்டர் வினீத்திடம், தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்க மாவட்ட கொள்கை பரப்பு செயலாளர் பரமசிவம் புகார் மனு அளித்தார். அதில் அவர் கூறியிருப்பதாவது:- வேலம்பட்டி கால்நடை மருத்துவமனையில் பணியாற்றும் கால்நடை மருத்துவர் உரிய நேரத்திற்கு வருவதில்லை. விவசாயிகள் நேரில் சென்று அழைத்தாலும், கால்நடைகளுக்கு சிகிச்சை அளிக்க வர மறுக்கிறார். கால்நடைகளுக்கு முறையாக தடுப்பூசி செலுத்துவதில்லை.

மேலும் இது போன்ற முகாம் மற்றும் அறிவிப்புகளை விவசாயிகளுக்கு தெரிவிப்பதில்லை. கால்நடை மருத்துவமனை இருந்தும் தனியார் மருத்துவரிடம் சென்று கால்நடைகளுக்கு சிகிச்சை அளிக்க வேண்டிய நிலை உள்ளது. எனவே அவர் மீது துறை ரீதியான விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது.

Tags:    

Similar News