உள்ளூர் செய்திகள்

கோப்புபடம்.

மேற்குத்தொடர்ச்சி மலைப்பகுதி அடர் வனத்தில் கொசுக்கடியால் சாலைக்கு வரும் யானைகள்

Published On 2022-08-04 05:53 GMT   |   Update On 2022-08-04 05:53 GMT
  • யானைகள் உடுமலை மூணாறு செல்லும் வழித்தடத்தில் இருக்கும் பசுமையான முச்செடிகளுக்குள் தஞ்சம் புகுந்துள்ளன.
  • சாலையோரம் வரும் யானைகளை கண்டு வாகன ஓட்டிகள் பீதி அடைந்துள்ளனர்.

உடுமலை :

உடுமலை வனப்பகுதியில் கொசுக்கள் தொல்லை அதிகரித்து இருப்பதால் காட்டு யானைகள் வனத்தை விட்டு வெளியேறி சாலையோரம் உலா வருகின்றன என்று வனத்துறையினர் தெரிவித்தனர்.

ஆனைமலை புலிகள் காப்பகத்துக்கு உட்பட்ட உடுமலை அமராவதி வனச்சரகபகுதிகளில் யானைகள், மான்கள், சிறுத்தை, புலி, கரடி, உடும்பு பாம்பு, காட்டுமாடு, சென்னாய்கள், காட்டு யானைகள் என்று ஏராளமான வசித்து வருகின்றன தற்போது பருவமழை அடிக்கடி பெய்து வருவதாலும் பருவநிலை அடிக்கடி மாறுவதால் வனப்பகுதிகளில் கொசுக்கள் அதிகரித்து யானைகளை கடித்து வருவதால் அவற்றிலிருந்து தப்பிப்பதற்காக யானைகள் உடுமலை மூணாறு செல்லும் வழித்தடத்தில் சாலையோரம் இருக்கும் பசுமையான முச்செடிகளுக்குள் தஞ்சம் புகுந்துள்ளன.பகல் முழுவதும் சாலையோரம் போல வரும் யானைகளை கண்டு வழித்தடத்தில் செல்லும் வாகன ஓட்டிகள் பீதி அடைந்துள்ளனர்.

உடுமலை மூணார் சாலையில் காம ஊத்துபள்ளம், ஏழுமலையான் கோயில் பிரிவு ஆகிய பகுதிகளில் யானைகள் உலா வருவதால் வனத்துறையினர் வாகன ஓட்டுனர்ளை எச்சரிக்கையுடன் பயணிக்கும் படி அறிவுறுத்தியுள்ளனர்.

Tags:    

Similar News