உள்ளூர் செய்திகள்

கோப்புபடம்.

சமூக வலைத்தளத்தில் கருத்து வெளியிட்டதில் தகராறு - வாலிபருக்கு அடி, உதை

Update: 2023-06-10 11:33 GMT
  • சமூக வலைத்தளத்தில் படம் ஒன்றை பதிவு செய்ததாக கூறப்படுகிறது.
  • தகராறு முற்றி கைகலப்பாக மாறியது.

பல்லடம் :

திருப்பூர் தென்னம்பாளையம் பகுதியை சேர்ந்த முருகன் என்பவரது மகன் யுவராஜ்(வயது 23). சமூக வலைத்தளத்தில் படம் ஒன்றை பதிவு செய்ததாக கூறப்படுகிறது. இதுகுறித்து திருப்பூர் பலவஞ்சிபாளையம் பகுதியை சேர்ந்த சிவக்குமார் என்பவரது மகன் குணா(34) மற்றும் அவரது நண்பர்கள் அறிவழகன், விஜய் ஆகியோர் கருத்து கூறியதாகவும், இதனால் இவர்களுக்குள் சமூக வலைதளத்தில் மோதல் ஏற்பட்டதாக கூறப்படுகிறது.

இந்தநிலையில் நேற்று மாலை பல்லடம் அருகே உள்ள கரைப்புதூர் ஊராட்சி அவரப்பாளையம் பகுதியில் யுவராஜ் சென்று கொண்டிருந்தபோது, அங்கு வந்த குணா, அறிவழகன், விஜய் ஆகிய 3பேரும் சேர்ந்து யுவராஜுடன் வாய் தகராறில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது. இதற்கிடையே தகராறு முற்றி கைகலப்பாக மாறியது. இதில் யுவராஜை மற்ற 3பேரும் சேர்ந்து தாக்கினர்.

இதனால் காயமடைந்த அவர் இந்த சம்பவம் குறித்து பல்லடம் போலீசில் புகார் அளித்தார். புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த போலீசார் குணாவை கைது செய்து பல்லடம் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். மேலும் இந்த வழக்கில் தலைமறைவாக உள்ள 2 பேரை போலீசார் தேடி வருகின்றனர்.

Tags:    

Similar News