உள்ளூர் செய்திகள்

குண்டும் குழியுமாக உள்ள சாலையை படத்தில் காணலாம்.

திருப்பூர் கோல்டன் நகரில் குண்டும்-குழியுமாக கிடக்கும் சாலையால் பொதுமக்கள் அவதி

Published On 2023-08-26 10:51 GMT   |   Update On 2023-08-26 10:51 GMT
  • பொதுமக்களின் கேள்விக்கு முன்னுக்கு பின் முரணாக பதில் கூறி அலட்சியம் செய்து மவுனம் காத்து வருகிறார்கள்.
  • சாக்கடை குழாய் பதிப்பு பணிகளுக்காக குழிகள் தோண்டப்பட்டு மூடப்படாமல் உள்ளது.

பெருமாநல்லூர்:

திருப்பூர் மாநகராட்சி பகுதியில் 2-ம் மண்டலத்திற்கு உட்பட்ட ஊத்துக்குளி ரோடு கோல்டன் நகர் 32-வது வார்டில் கடந்த ஒரு மாதத்திற்கு மேலாக குழாய் பதிப்பு மற்றும் சாக்கடை குழாய் பதிப்பு பணிகளுக்காக குழிகள் தோண்டப்பட்டு மூடப்படாமல் உள்ளது.

இந்நிலையில் ரோடு போடுவதற்காக பெரிய ஜல்லி கற்களை கோல்டன் நகர் அருண் மெடிக்கல் முதல் சஞ்சய் நகர் பள்ளிவாசல் வரை கொட்டி அதை சரிவர ரோடு ரோலரைக் கொண்டு சமன் செய்யாமல் ஆங்காங்கே குண்டும் குழியுமாக அரைகுைறயாக விட்டுச் சென்றுள்ளனர்.

இதனால் பொதுமக்கள் மற்றும் பள்ளிக்கு செல்லும் மாணவ- மாணவிகள், இருசக்கர வாகன ஓட்டிகள் மற்றும் சிறுவர்கள் முதல் பெரியவர் வரை அனைவரும் இந்தப் சாலையில் விழுந்து விடுவோமோ என்ற பயத்துடனேயே பயணிக்கின்றனர். இது சம்பந்தமாக ெபாதுமக்கள் மாநகராட்சி நிர்வாகம் மற்றும் வார்டு கவுன்சிலர் ஆகியோரை அணுகி, இத்தனை வேலை நிலுவையில் இருக்கும் போது எதற்காக ஜல்லி கற்களை கொட்டினீர்கள் என்று முறையிட்டுள்ளனர்.

பொதுமக்களின் கேள்விக்கு முன்னுக்கு பின் முரணாக பதில் கூறி அலட்சியம் செய்து மவுனம் காத்து வருகிறார்கள். ஆகையால் மாநகராட்சி நிர்வாகம் உரிய நடவடிக்கை மேற்கொண்டு குண்டும் குழியுமாக இருக்கும் இச்சாலையை சீரமைத்து தர வேண்டும் என்று அப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இது தவறும் பட்சத்தில் பொதுமக்கள் மாவட்ட ஆட்சியரிடம் புகார் மனு கொடுத்து சில கட்சிகளின் ஆதரவோடு போராட முடிவெடுத்துள்ளதாக தெரிகிறது. ஆகவே மாநகராட்சி நிர்வாகம் கவனத்தில் கொண்டு உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என கோல்டன் நகர் பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags:    

Similar News