புதுப்பாளையத்தில் காலை உணவு திட்டம் தொடக்க விழா நடைபெற்ற காட்சி.
உடுமலை அரசு பள்ளிகளில் காலை உணவு திட்டம் தொடக்கம்
- அரசு பள்ளிகளில் காலை உணவு திட்டம் தொடங்கப்பட்டது.
- ஊராட்சி தலைவர் மத்தீன், நகர திமுக., செயலாளர் வேலுச்சாமி ஆகியோர் மாணவர்களுக்கு காலை உணவு திட்டத்தை தொடங்கி வைத்தனர்.
உடுமலை:
உடுமலை ,குடிமங்கலம் ,மடத்துக்குளம் ஒன்றியங்களில் உள்ள அரசு பள்ளிகளில் காலை உணவு திட்டம் தொடங்கப்பட்டது. உடுமலை நகராட்சி 30- வது வார்டு பழனி ஆண்டவர் நகர் அரசு நடுநிலைப்பள்ளியில் ஊராட்சி தலைவர் மத்தீன், நகர திமுக., செயலாளர் வேலுச்சாமி ஆகியோர் மாணவர்களுக்கு காலை உணவு திட்டத்தை தொடங்கி வைத்தனர்.
நிகழ்ச்சியில் நகராட்சி ஆணையர் ஜெரால்டு , துணைத்தலைவர் கலைராஜன், கவுன்சிலர்கள் ஆசாத், சாந்தி ,அர்ஜுனன், ஆறுச்சாமி,மும்தாஜ், பொதுக்குழு உறுப்பினர் யுஎன்பி., குமார், இளைஞரணி அமைப்பாளர் விக்ரம், ஜெயலட்சுமி, கிருபானந்தம், சின்னத்துரை ,சிராஜ் ரேணுகா, சிதம்பரம் மற்றும் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
மைவாடி தொடக்க பள்ளியில் மடத்துக்குளம் மேற்கு ஒன்றிய செயலாளர் ஈஸ்வர சாமி துவக்கி வைத்தார். ஊராட்சி தலைவர் முருகன் உட்பட பங்கேற்றனர். தளி பள்ளியில் பேரூராட்சி தலைவர் உதயகுமார், கடத்தூர் துவக்கப்பள்ளியில் ஊராட்சி தலைவர் கலைவாணி கலையரசு மோகன் ஆகியோர் துவக்கி வைத்தனர். கண்ணமநாயக்கனூரில் ஊராட்சி மன்ற தலைவர் கருப்பாத்தாள், எலைய முத்தூரில் ஊராட்சி மன்ற தலைவர் மாரிமுத்து, புதுப்பாளையத்தில் குடிமங்கலம் மேற்கு ஒன்றிய திமுக., செயலாளர் முரளி, வடுகபாளையம் ,சுங்கார முடக்கு, லிங்கம நாயக்கனூர் ஆகிய இடங்களில் குடிமங்கலம் ஒன்றிய குழு துணை தலைவர் புஷ்பராஜ் ஆகியோர் தொடங்கி வைத்தனர்.
நிகழ்ச்சியில் நிர்வாகிகள் நித்தியானந்தன் ,சண்முகசுந்தரம் ,ஞானசேகரன், வெங்கடேஷ் ஆகியோர் பங்கேற்றனர்.