உள்ளூர் செய்திகள்

ரத்த தான முகாம் நடைபெற்ற காட்சி.

ரத்த தான முகாம்

Published On 2023-06-15 10:40 GMT   |   Update On 2023-06-15 10:40 GMT
  • திருப்பூர் அரசு தலைமை மருத்துவமனையில் உள்ள ரத்த வங்கியில் ரத்த தான முகாம் நடைபெற்றது.
  • 18 வயதுக்கு மேல் உள்ளவர்கள் தானம் செய்யலாம்.

திருப்பூர் :

திருப்பூர் சிக்கண்ணா அரசு கலைக்கல்லூரி நாட்டு நலப்பணித் திட்டம் அலகு 2 சார்பாக உலக ரத்த தான தினத்தை முன்னிட்டு திருப்பூர் அரசு தலைமை மருத்துவமனையில் உள்ள ரத்த வங்கியில் ரத்த தான முகாம் நடைபெற்றது. நிகழ்ச்சியில் அலகு 2 ஒருங்கிணைப்பாளர் மோகன்குமார் முன்னிலை வகித்தார். சிறப்பு விருந்தினராக நல்லூர் காவல் ஆய்வாளர் மகாலட்சுமி கலந்து கொண்டு ரத்ததான முகாமை தொடங்கி வைத்தார். அவர் பேசுகையில், தானத்தில் சிறந்தது ரத்த தானம், முகம் தெரியாதவர்களை காப்பாற்ற அனைவரும் ரத்த தானம் செய்ய முன் வரவேண்டும். 18 வயதுக்கு மேல் உள்ளவர்கள் தானம் செய்யலாம் என்றார்.

மாணவர்கள் ரத்த தானத்தை ஊக்குவிக்கும் வகையில் ரத்தம் கொடுங்கள், பிளாஸ்மா கொடுங்கள், வாழ்க்கையை பகிர்ந்து கொள்ளுங்கள் என்ற மைய கருத்தை வலியுறுத்தி மாணவ செயலர்கள் ராஜபிரபு, விஜய், காமராஜ், மது கார்த்திக், பூபதிராஜா ஆகியோர் தலைமையில் ரத்த தான உறுதிமொழி எடுத்துக்கொண்டனர். இம்முகாமில் 19 யூனிட் ரத்த தானம் செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது. நிகழ்ச்சியில் மருத்துவர்கள் சிந்தியா, முரளி கார்த்திக் ஆகியோர் கலந்து கொண்டு தானம் செய்த மாணவர்களுக்கு சான்றிதழ் வழங்கினர். நிகழ்ச்சிக்கான ஏற்பாட்டினை கல்லூரி முதல்வர் கிருஷ்ணன் செய்திருந்தார்.

Tags:    

Similar News