உள்ளூர் செய்திகள்

கலெக்டர் வினீத்திடம் விழிப்புணர்வு நோட்டீஸ் வழங்கிய விஜய் மக்கள் இயக்க நிர்வாகிகள். 

விஜய் மக்கள் இயக்கம் சார்பில் ரத்ததானம் குறித்து விழிப்புணர்வு பிரச்சாரம்

Published On 2022-09-16 11:08 GMT   |   Update On 2022-09-16 11:08 GMT
  • கலெக்டர் வினீத், மருத்துவக் கல்லூரி மற்றும்பொதுமக்கள்,பள்ளி, கல்லூரிகளில் பிரச்சார நோட்டீஸ் விநியோகிக்கப்பட்டது.
  • விழிப்புணர்வு பிரச்சாரம் திருப்பூர் மாநகர தலைமை இயக்கம் சார்பில் நடைபெற்றது.

திருப்பூர் :

நடிகர் விஜய் உத்தரவின்படி விஜய் மக்கள் இயக்க பொதுச்செயலாளர் புஸ்சி ஆனந்து வழிகாட்டுதலின்படி ரத்ததான விழிப்புணர்வு பிரச்சாரம் திருப்பூர் மாநகர தலைமை இயக்கம் சார்பில் நடைபெற்றது. இதையொட்டி மாவட்ட கலெக்டர் வினீத், மருத்துவக் கல்லூரி மற்றும்பொதுமக்கள்,பள்ளி, கல்லூரிகளில் பிரச்சார நோட்டீஸ் விநியோகிக்கப்பட்டது.

இதில் மாநகர தலைவர் குத்புதீன், மாநகரச் செயலாளர் சின்னதுரை ,மாநகர துணைத்தலைவர் அலாவுதீன் ,மாநகர ஆலோசகர் பஷீர், மாநகர துணைச்செயலாளர் ரவி ,மாநகர பொருளாளர் ஜெயபிரகாஷ் மற்றும் மாநகர நிர்வாகிகள் கனகராஜ் ,தனபால், அக்பர் மற்றும் பல்லடம் நகர செயலாளர் சதீஷ் கலந்து கொண்டனர் .

Tags:    

Similar News