உள்ளூர் செய்திகள்

பல்லடம் ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்றவர்கள். உடுமலை ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்றவர்கள்.

உடுமலை-பல்லடத்தில் பா.ஜ.க. ஆர்ப்பாட்டம்

Published On 2022-11-16 12:57 IST   |   Update On 2022-11-16 12:57:00 IST
  • உடுமலை மத்திய பேருந்து நிலையம் முன்பு நகர பாஜக. கட்சி சார்பில் மண்டல தலைவர் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
  • பல்லடம் கொசவம்பாளையம் ரோட்டில் பா.ஜ.க. சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

உடுமலை :

திருப்பூர் மாவட்டம் உடுமலை மத்திய பேருந்து நிலையம் முன்பு நகர பாஜக. கட்சி சார்பில் பால்விலை உயர்வு, மின்சார கட்டணம் உயர்வு, சொத்து வரி உயர்வு, மோட்டார் வாகன வரி உயர்வை கண்டித்து நகர மண்டல தலைவர் கண்ணாயிரம் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது . இதில்மாநில செய்தி தொடர்பாளர் கார்வேந்தன், நகர பொதுச்செயலாளர் சீனிவாசன், திருப்பூர் தெற்கு மாவட்ட பொதுச் செயலாளர் வடுகநாதன் , சிவசங்கர், ஐயப்பன், தம்பிதுரை, குப்புசாமி, கண்ணப்பன், கணேஷ், ஆனந்தன், புவனேஸ்வரி ,பாலு, கொண்டம்மாள், நாகவேணி, செல்வராஜ், காளிதாஸ், முருகேஷ், வெங்கடாசலம், சிவசங்கர்*,களிர் அணி தலைவர் ராதிகா, துணைத் தலைவர் செல்வி, ரேவதி ,அன்னபூரணி, மீனா, விஜயலட்சுமி ,முத்துலட்சுமி, லீலாவதி ,சரஸ்வதி ஆகியோர் கலந்து கொண்டனர்.

பல்லடம் கொசவம்பாளையம் ரோட்டில் பா.ஜ.க. சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. பா.ஜ.க. மாவட்ட துணைத் தலைவர் ஜோதிமணி தலைமை வகித்தார். மாவட்டத் துணை தலைவர் வினோத் வெங்கடேஷ், நகரச் செயலாளர் வடிவேல், நகர்மன்ற உறுப்பினர் சசிரேகா, இளைஞர் அணி ரமேஷ் குமார், மற்றும் பா.ஜ.க.நிர்வாகிகள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News