உள்ளூர் செய்திகள்

திருப்பூர் மத்திய பேருந்து நிலையத்தில் மலிவு விலையில் மஞ்சப்பை வழங்கும் தானியங்கி இயந்திரத்தை துவக்கி வைத்தபோது எடுத்தபடம். 

திருப்பூர் மத்திய பஸ் நிலையத்தில் மஞ்சப்பை வழங்கும் தானியங்கி எந்திரம் -எம்.எல்.ஏ, மேயர் தொடங்கி வைத்தனர்

Published On 2023-04-26 08:47 GMT   |   Update On 2023-04-26 08:47 GMT
  • பொது மக்கள் துணிப்பைகளை பயன்படுத்துவதை ஊக்குவிக்கும் வகையில் "மீண்டும் மஞ்சப்பை" திட்டத்தை முதலமைச்சர் தொடங்கி வைத்தார்.
  • ரூ.10 விலையில் பொது மக்கள் மஞ்சள் பைகளை பெற்றனர்.

திருப்பூர் :

பொது மக்கள் துணிப்பை களை பயன்படுத்துவதை ஊக்குவிக்கும் வகையில் "மீண்டும் மஞ்சப்பை" திட்டத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார். அதனை தொடர்ந்து நெகிழி இல்லா திருப்பூர், மாநகராட்சியாக மாற்றிட திருப்பூர் மத்திய பஸ் நிலையத்தில் மஞ்சப்பை இயந்திரம் அமைக்கப்பட்டது. இதனை இன்று திருப்பூர் தெற்கு தொகுதி எம்.எல்.ஏ.செல்வராஜ், திருப்பூர் மாநகராட்சி மேயர் தினேஷ்குமார் ஆகியோர் தொடங்கி வைத்தனர்.

நிகழ்ச்சியில் மாநகராட்சி கமிஷனர் பவன் குமார் ஜி கிரியப்பனவர், துணை மேயர் ஆர்.பாலசுப்ரமணியம், தெற்கு மாநகர செயலாளர் டி கே டி மு.நாகராசன், 22வது வார்டு கவுன்சிலர் ராதாகிருஷ்ணன், வாலிபாளையம் பகுதி செயலாளர் மு.க. உசேன் மற்றும் நிர்வாகிகள் பொது மக்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர். மேலும், திறந்து வைத்த மஞ்சள் பை வழங்கும் தானியங்கி இயந்திரத்தின்

மூலம் ரூ.10 விலையில் பொது மக்கள் மஞ்சள் பைகளை பெற்றனர்.இவ்வியந்திரத்தின் மூலம் நாள் ஒன்றுக்கு 300 பைகள் நிரப்பப்படும். பைகள் தீரும் பட்சத்தில் உடனடியாக இயந்திரத்தில் பைகள் நிரப்பப்படும். ரூ.10 காசு அல்லது நோட்டுகளாக இந்த இயந்திரத்தில் செலுத்தி பொதுமக்கள் மஞ்சள் பைகளை பெறலாம்.

Tags:    

Similar News