உள்ளூர் செய்திகள்

கோப்புபடம்.

தற்காலிக பட்டாசு கடை உரிமம் பெற விண்ணப்பிக்கலாம்

Published On 2022-08-09 07:34 GMT   |   Update On 2022-08-09 07:34 GMT
  • பட்டாசுக்கடை உரிமம் பெற இன்று முதல் அக்டோபா் 8 ந் தேதி வரையில் மாநகர காவல் ஆணையா் அலுவலகத்தில் விண்ணப்பிக்கலாம்.
  • உரிமக் கட்டணம் ரூ.1200-ஐ கருவூலகத்தில் செலுத்தியதற்கான சலான் இணைக்கப்பட்டிருக்க வேண்டும்.

திருப்பூர் :

தீபாவளிப் பண்டிகையை ஒட்டி, திருப்பூா் மாநகரில் தற்காலிக பட்டாசு கடை உரிமம் பெற இன்று விண்ணப்பிக்கலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.இது குறித்து திருப்பூா் மாநகர காவல் ஆணையா் அலுவலகம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது:- திருப்பூா் மாநகர காவல் நிலையங்களின் எல்லைக்குட்பட்ட பகுதிகளில் தீபாவளிப் பண்டிகையை ஒட்டி தற்காலிகமாக பட்டாசுக்கடை உரிமம் பெற இன்று முதல் அக்டோபா் 8 ந் தேதி வரையில் மாநகர காவல் ஆணையா் அலுவலகத்தில் கீழ்கண்ட ஆவணங்களுடன் விண்ணப்பிக்கலாம்.

இதில் விண்ணப்பிக்க விண்ணப்பப் படிவம் ஏ 5ல் ரூ.2 மதிப்புள்ள நீதிமன்ற வில்லை ஒட்டப்பட்டிருக்க வேண்டும். உரிமக் கட்டணம் ரூ.1200-ஐ கருவூலகத்தில் செலுத்தியதற்கான சலான் இணைக்கப்பட்டிருக்க வேண்டும் (சலான் மாநகர காவல் அலுவலகத்தில் கிடைக்கும்), பட்டாசுகளை இருப்புவைத்து விற்பனை செய்யப்படவுள்ள இடத்தின் வரைபடம் 6 நகல்களுடன், வரைபடத்தில் சம்பந்தப்பட்ட இடத்தின் முகவரி முழுமையாக குறிப்பிட்டிருப்பதுடன், மனுதாரா் தனது கையொப்பம் இட்டிருக்க வேண்டும். பட்டாசு விற்பனை செய்யும் இடம் சொந்தக் கட்டடமாக இருந்தால் 2022 -23 ஆம் ஆண்டுக்கான சொத்துவரி ரசீது இணைக்கப்பட வேண்டும். வாடகை கட்டடமாக இருந்தால் சொத்து வரி ரசீது மற்றும் சாட்சிகள் முன்னிலையில் கட்டட உரிமையாளருடன் ரூ. 20க்கான முத்திரைதாளில் வாடகை ஒப்பந்த ஆவணத்தையும் இணைக்க வேண்டும்.

மேலும் கடை அமையவுள்ள இடங்களைப் பாா்வையிட்டு விசாரணைக்கு பின் காவல் துறை, தீயணைப்புத் துறை ஆய்வில் திருப்தியடைந்தால் மட்டும் பட்டாசு உரிமம் வழங்கப்படும். அதேவேளையில் குறித்த காலக்கெடுவுக்குள் முழுமையாக பெறப்படாத விண்ணப்பங்கள் எவ்வித முன்னறிவிப்பும் இல்லாமல் தள்ளுபடி செய்யப்படும் எனத்தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags:    

Similar News