உள்ளூர் செய்திகள்
பெண்மணிக்கு இலவசமாக மனு  எழுதிக்  கொடுக்கும் முதியவர்

திருப்பூர் கலெக்டர் அலுவலகத்தில் பொதுமக்களுக்கு இலவசமாக மனு எழுதி கொடுக்கும் முதியவர்

Published On 2023-06-30 13:42 IST   |   Update On 2023-06-30 13:42:00 IST
  • ஆதார் கார்டு, இலவச வீட்டு மனை போன்ற பணிகளுக்காக கலெக்டர் அலுவலகத்திற்கு பொதுமக்கள் வருகை புரிகின்றனர்.
  • பொதுமக்களுக்கு இலவசமாக மனு எழுதும் பணியில் ஈடுபட்டு வருகிறார்.

திருப்பூர்:

திருப்பூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் பல்வேறு அலுவலகங்கள் செயல்பட்டு வருகின்றது. இந்த அலுவலகத்தில் ஆதார் கார்டு, இலவச வீட்டு மனை போன்ற பணிகளுக்காக கலெக்டர் அலுவலகத்திற்கு பொதுமக்கள் வருகை புரிகின்றனர்.

மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் மனு எழுத 50க்கும் மேற்பட்டோர் மனுக்களை எழுதி தருகின்றனர். இந்த மனுவிற்கு 50 முதல் 100 ரூபாய் வரை பொதுமக்களிடம் கட்டணம் வாங்குகின்றனர். சிலர் பொதுமக்களுடைய பணி வேலைகளை செய்து தருவதாக கூறி அதிக பணம் பெற்று விடுகின்றனர்.

இவர்கள் மத்தியில் தென்காசி மாவட்டம் கடையநல்லூர் பகுதியை சேர்ந்த சண்முகவேல்(வயது 76) என்பவர் திருப்பூரில் தங்கி திருப்பூர் மாவட்ட கலெக்டர் வளாகத்தில் பொதுமக்களுக்கு இலவசமாக மனு எழுதும் பணியில் ஈடுபட்டு வருகிறார்.

தனக்கு அருகில் உள்ள ஜெராக்ஸ் கடையினர் மனு எழுத பேப்பர்களை இலவசமாக தருவதாகவும் மனு எழுத வருபவர்கள் தேநீர் அருந்த ரூ.10, ரூ.20 வலுக்கட்டாயமாக தருவதாக கூறுகிறார். இலவசமாக மனு எழுதி கொடுக்கும் சண்முகவேலின் சேவைக்கு பொதுமக்கள் பாராட்டு தெரிவித்து வருகின்றனர்.

Tags:    

Similar News