உள்ளூர் செய்திகள்

கோப்புபடம்

12-ம்வகுப்பு முடித்த ஆதிதிராவிட மாணவர்கள் வேலைவாய்ப்புடன்கல்வி பயில விண்ணப்பிக்கலாம்

Update: 2023-05-27 10:32 GMT
  • குடும்ப வருமானம் ஆண்டிற்கு ரூ.3 லட்சத்திற்குள் இருக்க வேண்டும்.
  • இத்திட்டத்தில் வருடாந்திர ஊதியமாக ரூ.1,70,000 முதல் ரூ.2,20,000 வரை பெறலாம்.

திருப்பூர்:

திருப்பூர் மாவட்ட கலெக்டர் கிறிஸ்துராஜ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

தமிழ்நாடு ஆதிதிராவிடர் வீட்டுவசதி மற்றும் மேம்பாட்டுக் கழகம் (தாட்கோ) மூலமாக 2022 மற்றும் 2023 ம் ஆண்டுகளில் 12-ம் வகுப்பு முடித்த ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினத்தை சார்ந்த மாணவர்களுக்குஎச்.சி.எல் நிறுவனத்தில் வேலை வாய்ப்புடன் கூடிய பட்டப்படிப்பு பி.எஸ்.சி. கம்யூட்டிங் டிசைனிங், பி.காம்., பி.சி.ஏ., பி.பி.ஏ., சேர்ந்து படித்திட வழிவகை செய்யப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

எச்சிஎல். நிறுவனத்தில் 12-ம் வகுப்பு முடித்த ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினத்தை சார்ந்தவருக்கு வேலைவாய்ப்புடன் ராஜஸ்தான் மாநிலத்திலுள்ள புகழ்வாய்ந்த பிட்ஸ்பிலானி கல்லூரியில் பி.எஸ்.சி. கம்யூட்டிங் டிசைனிங் பட்டபடிப்பு, தஞ்சாவூர் மாவட்டத்திலுள்ள சாஸ்தரா பல்கலைகழகத்தில் பிசிஏ.,பட்டப்படிப்பு, அமிட்டி பல்கலைகழகத்தில் பிசிஏ.,பி.பி.ஏ.,பி.காம். மற்றும் நாக்பூரிலுள்ள ஐஐஎம் பல்கலைக்கழகத்தில் இன்டிகிரேட்டடு மேனேஜ்மெண்ட் பட்டபடிப்பு சேர்ந்து படித்திட வாய்ப்பும் பெற்று தரப்படும்.

இதற்கான தகுதிகள் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின இனத்தைச் சார்ந்தவராக இருக்க வேண்டும். 12-ம் வகுப்பில் 2022ம் ஆண்டுகளில் முடித்தவர்கள் 60 சதவீதம் மற்றும் 2023 ம் ஆண்டுகளில் முடித்தவர்கள் 75 சதவீதம் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். குடும்ப வருமானம் ஆண்டிற்கு ரூ.3 லட்சத்திற்குள் இருக்க வேண்டும். எச்.சி.எல்.மூலம்நடத்தப்படும் நுழைவுத்தேர்வில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். இந்நுழைவுத் தேர்வுக்கான பயிற்சி தாட்கோ மூலம் வழங்கப்படும். இப்படிப்பிற்கான செலவீனம் தாட்கோவால் ஏற்கப்படும். இத்திட்டத்தில் வருடாந்திர ஊதியமாக ரூ.1,70,000 முதல் ரூ.2,20,000 வரை பெறலாம்.

மேலும் திறமைக்கேற்றவாறு பதவி உயர்வின் அடிப்படையில் ஊதிய உயர்வும் பெறலாம். இப்பயிற்சியில் சேர தாட்கோ இணையதளம் www.tahdco.com என்ற முகவரியில் விண்ணப்பிக்கலாம் .மேலும் விபரங்களுக்கு மாவட்ட மேலாளர் அலுவலகம், தாட்கோ, அறை எண்:501 (ம) 503, 5 வது தளம், மாவட்ட கலெக்டர் அலுவலக வளாகம், பல்லடம் ரோடு, திருப்பூர்-641 604 என்ற முகவரியையும்,94450 29552 என்ற செல்போன் எண்ணையும் தொடர்பு கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.   

Tags:    

Similar News