உள்ளூர் செய்திகள்

அங்கன்வாடி ஊழியர்கள், மாணவர்களை படத்தில் காணலாம்.

அங்கன்வாடிக்குள் புகுந்த பாம்பால் பரபரப்பு

Published On 2022-09-19 16:38 IST   |   Update On 2022-09-19 16:38:00 IST
  • அங்கன்வாடி ஊழியர்களும், பெற்றோர்களும் பாம்பை பார்த்து அலறி அடித்து ஓடினர்.
  • போலீசார், தீயணைப்புத்துறையினர் பாம்பை பிடிக்கும் பணியில் ஈடுபட்டனர் .

திருப்பூர் :

திருப்பூர் மாநகராட்சி 20,30 வது வார்டு காமராஜர் நகர் 1வது வீதியில் அங்கன்வாடி பள்ளிக்கூடம் செயல்பட்டு வருகிறது .இங்கு சுற்றுவட்டார பகுதிகளில் இருந்து சுமார் 80க்கும் மேற்பட்ட குழந்தைகள் பால்வாடி பள்ளிக்கு வந்து செல்லும் நிலையில் இன்று காலை 9 மணி அளவில் அங்கன்வாடி ஊழியர்கள் பள்ளியை திறக்க வந்தபோது கட்டடத்தில் இருந்து பாம்பு ஒன்று வந்ததாக கூறப்படுகிறது .

அங்கன்வாடி ஊழியர்கள் மற்றும் பள்ளியில் விட்டு செல்வதற்காக வந்திருந்த பெற்றோர்களும் பாம்பை பார்த்து அலறி அடித்து ஓடினர்.

இது குறித்து உடனடியாக வடக்கு காவல் நிலையத்திற்கும் தீயணைப்பு துறையினருக்கும் தகவல் கொடுக்கப்பட்டது .சம்பவ இடத்திற்கு வந்த போலீசார், தீயணைப்புத்துறையினர் பாம்பை பிடிக்கும் பணியில் ஈடுபட்டனர் . அங்கன்வாடி கட்டிடம் சிதிலமடைந்த நிலையில் காட்சி அளிப்பதால் கட்டிடத்திற்குள் ஏராளமான பூரான் ,பல்லி பாம்பு உள்ளிட்ட விஷ ஜந்துக்கள் அவ்வப்போது மாணவர்களை அச்சுறுத்தி வருவதாக அங்கன்வாடி ஊழியர்கள் கவலை தெரிவித்தனர். உடனடியாக இந்த கட்டிடத்தை சீரமைக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர். 

Tags:    

Similar News