உள்ளூர் செய்திகள்

கோப்புபடம்.

பல்லடம் அருகே 700 கிலோ புகையிலை பொருட்கள் பறிமுதல் - 2பேர் கைது

Published On 2022-08-12 07:01 GMT   |   Update On 2022-08-12 07:01 GMT
  • புகையிலைப் பொருட்கள் விற்பனை செய்வதை தடுக்க போலீசார் கடும் நடவடிக்கை.
  • தமிழக முதலமைச்சர் உத்தரவிட்டிருந்தார்.

பல்லடம் :

தமிழகம் முழுவதும் அரசால் தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருட்கள் விற்பனை செய்வதை தடுக்க போலீசார் கடும் நடவடிக்கை எடுத்து தடை செய்ய வேண்டும் என்று தமிழக முதலமைச்சர் உத்தரவிட்டிருந்தார். அதன் அடிப்படையில் பொங்கலூர் அருகே திருப்பூர்- தாராபுரம் சாலை ஆண்டிபாளையம் பகுதியில் புகையிலை பொருட்கள் பதுக்கி வைத்திருப்பதாக அவினாசிபாளையம் போலீசாருக்கு தகவல் கிடைத்தது.

இதனைத் தொடர்ந்து தனிப்படை போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று பார்த்தபோது அங்கு விற்பனைக்காக தடை செய்யப்பட்ட 700 கிலோ புகையிலை பொருட்கள் இருப்பதை போலீசார் கண்டுபிடித்தனர். உடனடியாக 700 கிலோ புகையிலை பொருட்களை பறிமுதல் செய்ததுடன் இதனை பதுக்கி வைத்திருந்த மளிகை கடை வைத்து நடத்தி வரும் திருச்செங்கோட்டை சேர்ந்த முருகன் (வயது 42 ), சுரேஷ்குமார்( 44 ) ஆகிய 2 பேரையும் கைது செய்தனர். மேலும் அவர்களிடமிருந்து கடத்தலுக்கு பயன்படுத்திய கார் ஒன்றையும் போலீசார் பதிவு செய்தனர். 2 பேர் மீதும் வழக்கு பதிவு செய்து நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி ஜெயிலில் அடைத்தனர்.

ஒரே நேரத்தில் 700 கிலோ தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் பொங்கலூர் பகுதியில் கண்டுபிடிக்கப்பட்டது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Tags:    

Similar News