உள்ளூர் செய்திகள்

கைதான மோகன், ஜான்சன் பிரபுவையும், பறிமுதல் செய்யப்பட்ட ரேசன் அரிசி மூட்டைகளையும் படத்தில் காணலாம்.

ஒடிசாவில் இருந்து கேரளாவுக்கு கடத்திய 25ஆயிரம் கிலோ ரேசன் அரிசி பறிமுதல் - 2பேர் கைது

Published On 2022-09-11 10:25 GMT   |   Update On 2022-09-11 10:25 GMT
  • பல்லடம் கரடிவாவி சோதனைச் சாவடி அருகில் வாகன தணிக்கையில் ஈடுபட்டனர்.
  • லாரியில் வந்தவர்களை பிடித்து விசாரித்தனர்.

திருப்பூர் :

திருப்பூர் குடிமை பொருள் வழங்கல் குற்றப்புலனாய்வுத் துறை கோவை சரக போலீஸ் சூப்பிரண்டு பாலாஜி உத்தரவின் பேரின் ஈரோடு உட்கோட்ட துணை போலீஸ் சூப்பிரண்டு சுரேஷ் தலைமையில் திருப்பூர் குடிமை பொருள் வழங்கல் குற்றப்புலனாய்வுத்துறை சப்-இன்ஸ்பெக்டர்கள் கார்த்தி, இசக்கி மற்றும் போலீசார் பல்லடம் கரடிவாவி சோதனைச் சாவடி அருகில் வாகன தணிக்கையில் ஈடுபட்டனர்.

அப்போது அந்த வழியாக வந்த லாரியை நிறுத்தி சோதனை செய்தனர். அதில் மூட்டை, மூட்டையாக ரேஷன் அரிசி இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. லாரியில் வந்தவர்களை பிடித்து விசாரித்தனர். அவர்கள் ஈரோடு மாவட்டம் சென்னிமலையை சேர்ந்த டிரைவர் மோகன் (வயது 53), திருச்சி மாவட்டம் மணப்பாறை சேர்ந்த ஜான்சன் பிரபு (28) என்பது தெரியவந்தது. ஒடிசா மாநிலத்தில் இருந்து கடத்தி கேரளாவில் கள்ளச் சந்தையில் விற்பனை செய்ய 25 ஆயிரம் கிலோ ரேஷன் அரிசியை கடத்தி வந்தது தெரிய வந்தது. இதுகுறித்து மோகன், ஜான்சன் பிரபு ஆகிய 2 பேரையும் போலீசார் கைது செய்து 25 ஆயிரம் கிலோ ரேஷன் அரிசி மற்றும் லாரியை பறிமுதல் செய்தனர். 

Tags:    

Similar News