உள்ளூர் செய்திகள்

கோப்புபடம்.

2 ½ மாதத்தில் 10 பேர் குண்டர் சட்டத்தில் சிறையில் அடைப்பு - மாநகர போலீசார் அதிரடி நடவடிக்கை

Published On 2023-03-11 15:39 IST   |   Update On 2023-03-11 15:39:00 IST
  • பிப்ரவரி மாதம் 4-ந் தேதி கர்நாடக மாநிலத்தில் இருந்து கஞ்சா கடத்தி வந்த 2 பேரை கைது செய்தனர்.
  • முகமது ரகூப், அல்தாப் ஆகியோரிடம் குண்டர் சட்டத்தில் சிறையில் அடைப்பதற்கான உத்தரவு வழங்கப்பட்டது.

திருப்பூர் :

திருப்பூர் மாநகர மதுவிலக்கு போலீசார் கடந்த பிப்ரவரி மாதம் 4-ந் தேதி கர்நாடக மாநிலத்தில் இருந்து திருப்பூருக்கு 12 கிலோ கஞ்சா கடத்தி வந்த கேரள மாநிலம் பாலக்காட்டை சேர்ந்த முகமது ரகூப் (வயது 22), அல்தாப் (19) ஆகிய 2 பேரை கைது செய்தனர். கஞ்சாவையும் பறிமுதல் செய்தனர்.

இவர்கள் 2 பேரும் பொது அமைதிக்கும், பொதுமக்களுக்கும் குந்தகம் விளைவிக்கும் வகையில் குற்ற செயல்களில் ஈடுபட்டு வந்ததால் அவர்களை குண்டர் சட்டத்தில் சிறையில் அடைக்க மாநகர போலீஸ் கமிஷனர் பிரவீன்குமார் அபினபு உத்தரவிட்டார்.

அதன்படி கோவை மத்திய சிறையில் உள்ள முகமது ரகூப், அல்தாப் ஆகியோரிடம் ஓர் ஆண்டு குண்டர் சட்டத்தில் சிறையில் அடைப்பதற்கான உத்தரவு நேற்று வழங்கப்பட்டது. கடந்த ஜனவரி மாதம் முதல் இதுவரை திருப்பூர் மாநகரில் 10 பேர் குண்டர் சட்டத்தில் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.

Tags:    

Similar News