உள்ளூர் செய்திகள்
- போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை
- ஆம்பூர் அரசு மருத்துவமனையில் பிரேத பரிசோதனை
ஆம்பூர்:
திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் அடுத்த பழைய மின்னூர் மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் சேட் (வயது 72). கூலி தொழிலாளி.
நேற்று இரவு 7 மணி அளவில் வாணியம்பாடி ஆம்பூர் தேசிய நெடுஞ்சாலையில் சேட் சைக்கிளை ஓட்டிக்கொண்டு சென்று கொண்டிருந்தார்.
அப்போது அந்த வழியாக வந்த கார் சேட் ஓட்டி சென்ற சைக்கிள் மீது மோதியது. இதில் தூக்கி வீசப்பட்டு சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார்.
இது குறித்து ஆம்பூர் தாலுகா போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் சேட் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக ஆம்பூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.