உள்ளூர் செய்திகள்
செல்போன் டவர் அமைக்க எதிர்ப்பு தெரிவித்து போராட்டம்
- போலீசார் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர்
- பணியை தடுத்து நிறுத்திய பின்னர் கலைந்து சென்றனர்
ஆலங்காயம்:
வாணியம்பாடி டவுன் பகுதியில் உள்ள முஸ்லீம்பூர் கே.கே தெருவில் உள்ள ஒரு அடுக்குமாடி குடியிருப்பு கட்டிடத்தில் புதியதாக செல்போன் டவர் அமைக்கும் பணி நடைப்பெற்றது.
இதனை அறிந்த அந்த பகுதி பொதுமக்கள் செல்போன் டவர் அமைக்க எதிர்ப்பு தெரிவித்து கோஷங்களை எழுப்பி போராட்டத்தில் ஈடுபட்டனர்.
தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று வாணியம்பாடி டவுன் போலீசார் போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி, செல்போன் டவர் அமைக்கும் பணியை தடுத்து நிறுத்திய பின்னர் பொது மக்கள் கலைந்து சென்றனர்.