உள்ளூர் செய்திகள்

பள்ளி மாணவர்களை வேறு இடத்திற்கு மாற்றி அமர வைத்து கலெக்டர் பாஸ்கர் பாண்டியன் பார்வையிட்டார்.

இடியும் நிலையில் உள்ள அரசு பள்ளி வேறு இடத்திற்கு மாற்றம்

Published On 2023-03-01 15:12 IST   |   Update On 2023-03-01 15:20:00 IST
  • கலெக்டர் துரித நடவடிக்கை
  • புதிய வகுப்பறை கட்டி தர பொதுமக்கள் வலியுறுத்தல்

வாணியம்பாடி:

வாணியம்பாடி அடுத்த வளையாம்பட்டு ஊராட்சியில் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி இயங்கி வருகிறது. இதில் 190-க்கும் மேற்பட்ட மாணவர்கள் படித்து வருகிறனர்.

இப்பள்ளியில் 2 வகுப்பறை கட்டிடம் மட்டும் நல்ல நிலையில் உள்ளது. மற்ற வகுப்பறைகள், கட்டிடம் சிதலமடைந்து மோசமான நிலையில் உள்ளது.

பள்ளிக்கு புதிய வகுப்பறை கட்டி தர பொதுமக்கள் பலமுறை கோரிக்கை வைத்து வருகின்றனர்.

இந்நிலையில் தேசியநெடுஞ்சாலையில் கிரிசமுத்திரம் மேல்நிலைப்பள்ளிக்கு சென்றுக் கொண்டிருந்த 3 அரசு பள்ளி மாணவர்கள் வளையாம்பட்டு அருகே கார் மோதிய விபத்தில் பலியானார்கள்.

சம்பவ இடத்திற்கு கலெக்டர் பாஸ்கர பாண்டியன் வந்திருந்த போது அவரை சூழ்ந்துக் கொண்ட பொதுமக்கள் வளையாம்பட்டு ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் மாணவர்கள் படிப்பதற்கு போதிய இடவசதி இல்லை என தெரிவித்தனர்.

இதனையடுத்து பள்ளிக்கு நேரில் சென்று பார்வையிட்ட கலெக்டர் மாணவர்கள் இருந்த பள்ளி கட்டிடம் மற்றும் வகுப்புறைகள் சூழ்நிலையை கண்டு அதிர்ச்சி அடைந்து உடனடியாக அங்கிருந்து பள்ளிக்கு வருகை புரிந்து இருந்த 173 மாணவர்களையும் தனியார் பள்ளி பஸ்கள் மூலம் வளையாம்பட்டு ஊராட்சியில் கிராம வறுமை ஒழிப்பு சங்க கட்டிடத்தில் அமர வைத்து தற்காலிகமாக பள்ளியை மாற்றம் செய்தார்.

அங்கு வகுப்புகள் நடைபெற்றது. மேலும் வளையாம்பட்டு கிராமத்திலேயே நடுநிலைப்பள்ளி கட்டிடம் கட்டுவதற்கான நடவடிக்கை மேற்கொள்ள சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு கலெக்டர் உத்தரவிட்டார்.

Tags:    

Similar News