உள்ளூர் செய்திகள்

ஜோலார்பேட்டை ஒன்றிய பகுதிகளில் வளர்ச்சி திட்ட பணிகளை கலெக்டர் ஆய்வு

Published On 2022-10-09 09:29 GMT   |   Update On 2022-10-09 09:29 GMT
  • ரூ.75 லட்சம் மதிப்பீட்டில் நடைபெற்று வருகிறது
  • உள்ளாட்சி பிரதிநிதிகள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்

ஜோலார்பேட்டை:

ஜோலார்பேட்டை ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட பல்வேறு கிராம ஊராட்சிகளில் அரசு சார்ந்த நடைபெற்று வரும் பணிகள் குறித்து நேற்று கலெக்டர் திடீரென ஆய்வு மேற்கொண்டார்.

இதில் சின்ன வேப்பம்பட்டு பகுதியில் 75 லட்சம் மதிப்பீட்டில் நடைபெற்று வரும் மகளிர் சுய உதவி குழு கட்டிட பணியை பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

இதனைத் தொடர்ந்து கலந்திரா ஊராட்சியில் ரூ.1.53 லட்சம் மதிப்பீட்டில் நடைபெற்றுவரும் பண்ணை குட்டை அமைக்கும் பணியை பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

இதனைத் தொடர்ந்து அதே பகுதியில் அறிவழகன் என்ற விவசாயி ஜோலார்பேட்டை வட்டார வேளாண்மை விரிவாக்க மையம் சார்பில் பரிந்துரைக்கப்பட்டு புதிதாக வேளாண்மை துறை சார்ந்து அறிமுகம் செய்யப்பட்டுள்ள கதிரி 1812 ரக வே ர்க்கடலையை 2 ஏக்கர் பரப்பளவில் உற்பத்தி செய்ய ப்பட்டுள்ளதை மாவட்ட கலெக்டர் அமர் குஷ்வாஹா ஆய்வு செய்தபோது அந்த விவசாயிடம் வேர்க்கடலை மகசூல் குறித்து கேட்டபோது ஒரு வேர்க்கடலை செடியில் 100 முதல் 150 வேர்க்கடலைகள் காய்ப்பதால் அதிக மகசூல் கிடைப்பதாகவும் இந்த ரகம் புதிதாக இந்த வருடத்தில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தனர்.

இதனைத் தொடர்ந்து சின்னமோட்டூர் ஊராட்சியில் ஊராட்சி நிர்வாகம் சார்பில் ஆயிரம் முருங்கை நாற்றுகள் உற்பத்தி செய்து வரும் பணிகள் குறித்தும், அதனை நடவை செய்வதற்கான கால வரையறைகள் குறித்தும் கேட்டறிந்தார்.

மேலும் இந்த ஆய்வின்போது ஜோலார்பேட்டை ஒன்றிய குழு தலைவர் எஸ். சத்யா சதீஷ்குமார், வேளாண்மை துணை இயக்குனர் பச்சையப்பன், ஜோலார்பேட்டை வட்டார வளர்ச்சி அலுவலர்கள் தினகரன், முருகேசன், வேளாண்மை அலுவலர் ராதா உள்ளிட்ட துறை அலுவலர்கள் உள்ளாட்சி பிரதிநிதிகள் என பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News