உள்ளூர் செய்திகள்
திருட்டு நடந்த வீடு. பீரோ உடைக்கப்பட்டு பொருட்கள் சிதறி கிடந்த காட்சி.
வீட்டின் பூட்டை உடைத்து நகை, பணம் திருட்டு
- 27 ஆயிரம் அபேஸ்
- போலீசார் விசாரணை
ஜோலார்பேட்டை:
திருப்பத்தூர் மாவட்டம் நாட்டறம்பள்ளி அடுத்த கூத்தாண்டகுப்பம் பகுதியை சேர்ந்த ராஜாமணி (வயது 70) முன்னாள் சர்க்கரை ஆலை அலுவலர்.
சில நாட்களுக்கு முன்பு வழுக்கி விழுந்தது முதுகு தண்டுவடத்தில் பலத்த காயம் ஏற்பட்டது. ஓசூர் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வந்தார்.
ராஜாமணி நேற்று வீடு திரும்பினார். வீட்டின் முன்பக்க கதவை உடைக்கப்பட்டு இருப்பதைக் கண்டு அதிர்ச்சி அடைந்தார்.
உள்ளே சென்று பார்த்தபோது பீரோவில் வைக்கப்பட்டிருந்த 2 சவரன் தங்க நகை மற்றும் 27 ஆயிரம் மற்றும் அரை கிலோ வெள்ளி ஆகியவற்றை மர்ம நபர்கள் கொள்ளையடித்துச் சென்றுள்ளனர்.
இது குறித்து ராஜாமணி கொடுத்த தகவலின் பேரில் நாட்டறம்பள்ளி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.