உள்ளூர் செய்திகள்

பஸ்சில் கஞ்சா கடத்திய முதியவர் கைது

Published On 2022-12-30 15:37 IST   |   Update On 2022-12-30 15:37:00 IST
  • வாகன சோதனையில் 4 கிலோ கஞ்சா சிக்கியது
  • போலீசார் விசாரணை

ஜோலார்பேட்டை:

ஆந்திர மாநிலத்தில் இருந்து தமிழகத்திற்கு நாட்டறம்பள்ளி வழியாகசெல்லும் பஸ்சில் கஞ்சா கடத்துவதாக திருப்பத்தூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பாலகிருஷ்ணனுக்கு தகவல் கிடைத்தது.

அதைத்தொடர்ந்து அவரது உத்தரவின் பேரில் நாட்டறம்பள்ளி போலீஸ் இன்ஸ்பெக்டர் சாந்தி, சப்-இன்ஸ்பெக்டர் முனிரத்தினம் மற்றும் போலீசார் நாட்டறம்பள்ளி போலீஸ் நிலைய எல்லைக்குட்பட்ட ஆந்திர- தமிழக எல்லையான கொத்தூர் பகுதியில் வாகன சோதனை செய்தனர்.

அப்போது அந்த வழியாக வந்த ஆந்திர மாநில அரசு பஸ்சை நிறுத்தி அதில் பயணம் செய்த முதியவரிடம் சந்தேகத்தின் பேரில் விசாரணை செய்ததில் அவர் கஞ்சா கடத்தி வந்தது தெரிய வந்தது. அவரிடமிருந்து 4 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்தனர்.

மேலும் இதுகுறித்து விசாரணை செய்ததில் அவர் நாட் டறம்பள்ளி அருகே உள்ள பச்சூர் மடப்பள்ளம் பகுதியை சேர்ந்த கோபால் (வயது 60) என தெரிய வந்தது. பின்னர் போலீசார் அவர் மீது வழக்குப்பதிவு செய்து அவரை கைது செய்தனர்.

Tags:    

Similar News