உள்ளூர் செய்திகள்

போலீசார் வாகன சோதனை மேற்கொண்ட காட்சி.

விதிமுறைகளை மீறிய 88 வாகனங்களுக்கு அபராதம்

Published On 2022-11-09 10:04 GMT   |   Update On 2022-11-09 10:04 GMT
  • உரிமையாளர்கள் மீது வழக்குகள் பதிவு செய்யப்பட்டது
  • ரூ.75,400 அபராத கட்டணம் வசூல்

ஜோலார்பேட்டை:

புதிய நடைமுறையின்படி 'ஹெல்மெட் அணியாமல் மோட் டார் சைக்கிளில் செல்வோர்களுக்கு அபராத தொகை ரூ.100 லிருந்து ரூ.1,000 ஆகவும், சிக்னலை மதிக்காமல் வாகனங்களில் செல்வோர்களுக்கு ரூ.100-லிருந்து ரூ.500 ஆகவும், செல்போன் பேசியபடி வாகனத்தை ஓட்டுபவர்களுக்கு ரூ.1,000, காரில் 'சீட்' பெல்ட் அணியாமல் சென்றால் ரூ.100-லிருந்து ரூ.1,000 என அபராத கட்டணம் விதிக்கப்பட்டு வருகிறது.

ஜோலார்பேட்டையில் உள்ள ஜங்ஷன் பஸ் நிறுத்த பகுதி யில் இன்ஸ்பெக்டர் மங்கையர்க்கரசி தலைமையில் போலீ சார் நேற்று வாகன தணிக்கையில் ஈடுபட்டனர். அப்போது தலைக்கவசம் அணியாமல் இருத்தல், செல்போன் பேசிய படி வாகன ஓட்டுதல் உள்ளிட்ட 88 வாகனங்களின் உரிமையாளர்கள் மீது வழக்குகள் பதிவு செய்ய்ப்பட்டு ரூபாய் 75,400 அபராத கட்டணம் விதிக்கப்பட்டு வசூலிக்கப்பட்டது.

Tags:    

Similar News