உள்ளூர் செய்திகள்

விலை கட்டுப்படி ஆகாததால் கஞ்சா வளர்த்த 2 பேர் கைது

Published On 2023-08-14 09:22 GMT   |   Update On 2023-08-14 09:22 GMT
  • மரத்தில் பரண் அமைத்து போதையில் மிதப்பு
  • 3 கிலோ கஞ்சா செடியை பறிமுதல் செய்து அழித்தனர்

திருப்பத்துார்:

திருப்பத்துார் மாவட்டம், கந்திலி அருகே கும்மிடிகாம்பட்டியை சேர்ந்த ராஜேந்திரன் மகன் ஞானமூர்த்தி (வயது25), மோட்டூரை சேர்ந்த சிவகுமார் மகன் பூந்தமிழன்(21) இவர்கள் கஞ்சா புகைக்கும் பழக்கத்தில் நண்பர்களாகினர்.

நாளைடைவில் கஞ்சா பழக்கத்துக்கு அடிமையான இவர்கள், கஞ்சா அடிக்க தினமும் அதிகவிலை கொடுத்து வாங்குவதை விட வீட்டுக்குள் செடி வளர்த்து புகைக்க முடிவு செய்தனர்.

ஞானமூர்த்தி நாரியூர் கிராமத்தில் உள்ள தனது பாட்டி வீட்டில் தங்கி, வீட்டின் அருகே எருக்கஞ்செடிக்கு நடுவில் கஞ்சா செடி வளர்த்தார்.

வளர்க்கும் கஞ்சாவை ரகசியமாக புகைக்க, ஊரை ஒட்டியுள்ள அடர்ந்த காட்டுப்பகுதிக்குச் சென்ற அவர்கள், அங்கு உயரமான மரத்தின் மீது பரண் அமைத்தனர்.

தினமும் இங்கு வந்து பரண்மீது ஏறி கஞ்சா புகைத்து உல்லாசமாக இருந்து வந்தனர்.

தகவல் அறிந்த கந்திலி போலீசார் அங்கு சென்று ஆய்வு செய்தனர். அப்போது அவர்கள் கஞ்சா செடி வளர்த்தது தெரிந்தது.

இதனையடுத்து போலீசார் ஞானமூர்த்தி, பூந்தமிழனை கைது செய்தனர். அவர்கள் வளர்த்த 3 கிலோ கஞ்சா செடியை பறிமுதல் செய்து அழித்தனர்.

Tags:    

Similar News