உள்ளூர் செய்திகள்

போலீசாரின் வாகனங்களை சரக டி.ஐ.ஜி. கயல்விழி ஆய்வு செய்தார். 

தஞ்சை ஆயுதப்படை மைதானத்தில் போலீஸ் வாகனங்களை டி.ஐ.ஜி. ஆய்வு

Published On 2022-12-27 08:00 GMT   |   Update On 2022-12-27 08:00 GMT
  • 24 இருசக்கர வாகனங்கள் மற்றும் 100 நான்கு சக்கர வாகனங்களை ஆய்வு செய்தார்.
  • வாகனங்களின் பதிவேடுகளையும் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

தஞ்சாவூர்:

தஞ்சை மாவட்ட போலீசா ரால் பயன்படுத்தப்படும் அனைத்து வாகனங்களும் ஆண்டுதோறும் ஆய்வு செய்யப்படுவது வழக்கம்.

அதன்படி இந்த ஆண்டு போலீஸ் வாகனங்களை ஆய்வு செய்வதற்காக, அந்தந்த போலீஸ் நிலையங்களை சேர்ந்த போலீசார் தாங்கள் பயன்படுத்தும் வாகனங்களை தஞ்சை மாவட்ட ஆயுதப்படை மைதானத்திற்கு கொண்டு வந்தனர்.

இந்த வருடாந்திர ஆய்வில் சரக டி.ஐ.ஜி. கயல்விழி கலந்து கொண்டு காவல் ஆளினர்களின் கவாத்து, உடை பொருட்களை தணிக்கை செய்தார். பின்னர் 24 இருசக்கர வாகனங்கள், 100 நான்கு சக்கர வாகனங்கள் ஆகியவற்றை ஆய்வு செய்தார்.

அப்போது அந்த வாக னங்களை பார்வையிட்டு அவை சரியாக பராமரிக்கப்ப டுகிறதா? என்றும், எரிபொருள் சரியாக பயன்படுத்துகிறார்களா? எனவும், வாகனங்களின் பதிவேடுகளையும் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

இந்த ஆய்வில் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ரவளிப்பிரியா, தஞ்சை ஆயுதப்படை துணை போலீஸ் சூப்பிரண்டு முருகேசன், வாகன பிரிவு இன்ஸ்பெக்டர் விஜயலட்சுமி மற்றும் பலர் உடன் இருந்தனர்.

Tags:    

Similar News