உள்ளூர் செய்திகள்

போலி ஆவணங்கள் மூலம் வங்கியில் நகை கடன் வாங்கி பணத்தை திருப்பி செலுத்த மறுப்பு- நகை மதிப்பீட்டாளர் மீது வழக்கு

Published On 2022-08-08 15:15 IST   |   Update On 2022-08-08 15:15:00 IST
  • ரூ.21,62,000- அளவில் நகை கடனை மோசடியாக வாங்கியுள்ளதாக கூறப்படு கிறது.
  • ரூ.17,82, 251- பணம் வங்கிக்கு செலுத்த வேண்டிய நிலையில், அதனை செலுத்த வெங்கடேசன் மறுத்து விட்டாராம்.

ஓசூர்,

கிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம்பள்ளி அருகே வடமலபட்டி கிராமத்தை சேர்ந்தவர் ஆர்.வெங்கடேசன் (38). இவர், ஓசூர் அருகே நவதியில் உள்ள இந்தியன் வங்கி கிளையில் நகை மதிப்பீட்டாளராக தற்காலிகமாக பணியாற்றி வந்தார்.

இந்தநிலையில், அவர் போலி ஆவணங்கள் மூலம் ரூ.21,62,000/- அளவில் நகை கடனை மோசடியாக வாங்கியுள்ளதாக கூறப்படு கிறது. இதனை வங்கி மேலாளர் டி. வெங்கடேசன் (30) கண்டுபிடித்து, மதிப்பீட்டாளரிடம் கேள்வி எழுப்பினர்.

இதனையடுத்து அவர், ஒரு பகுதி தொகையை வங்கிக்கு செலுத்தினார். மேலும் ரூ.17,82, 251- பணம் வங்கிக்கு செலுத்த வேண்டிய நிலையில், அதனை செலுத்த வெங்கடேசன் மறுத்து விட்டாராம்.

இதையடுத்து வங்கி மேலாளர், மத்திகிரி போலீஸ் நிலையத்தில் புகார் செய்ததன்பேரில், போலீசார் வழக்குபதிவு செய்து விசாரித்து வருகிறார்கள்.

Tags:    

Similar News