உள்ளூர் செய்திகள்
நூற்றுக்கணக்கான பெண்கள் பால்குடம் எடுத்து சென்ற காட்சி.
அருணாசலேஸ்வரர் கோவிலில் ஆடி கிருத்திகையொட்டி முருகருக்கு சிறப்பு பூஜை
- பக்தர்கள் காவடி எடுத்து வழிபட்டனர்
- நூற்றுக்கணக்கான பெண்கள் பால்குடம் எடுத்தனர்
ேவங்கிக்கால்:
திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் ஆடி கிருத்திகையொட்டி இன்று காலை முருக பக்தர்கள் காவடி எடுத்து வழிபட்டனர்.
அருணாசலேஸ்வரர் கோவிலில் உள்ள பழனியாண்டவர் சன்னதியில் சிறப்பு பூஜை செய்தனர். ஆயிரக்கணக்கான முருக பக்தர்கள் ராஜகோபுரம் வழியாக மாட வீதியில் வலம் வந்து நேர்த்திக்கடன் செலுத்தினர். மேலும் அய்யங்குளத்தெருவில் உள்ள முருகன் கோயிலில் அதிகாலையில் நடை திறக்கப்பட்டு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றது.
நூற்றுக்கணக்கான பெண்கள் பால்குடம் எடுத்தும் வழிபட்டனர்.