உள்ளூர் செய்திகள்
திருவள்ளூரில் வாலிபருக்கு கத்திக்குத்து- ஒருவர் கைது
நாகப்பட்டினம் மாவட்டம் ஸ்ரீ காளி கிராமம் வைத்தீஸ்வரன் கோவில் தெருவை சேர்ந்தவர் சதீஷ்ராஜன்.
திருவள்ளூர்:
நாகப்பட்டினம் மாவட்டம் ஸ்ரீ காளி கிராமம் வைத்தீஸ்வரன் கோவில் தெருவை சேர்ந்தவர் சதீஷ்ராஜன் (22). இவர் திருவள்ளூர் உழவர் சந்தை அருகே நின்று கொண்டு இருந்தார்.
அப்போது அங்கு வந்த திருவள்ளூர் பத்தியால் பேட்டையை சேர்ந்த தனுஷ் அவரது நண்பர்கள் சதீஷ், சரவணன் ஆகிய 3 பேரும் சதீஷ்ராஜனை வழிமறித்து தகராறில் ஈடுபட்டனர். இதில் சதீஷ் ராஜனுக்கு கத்திக்குத்து விழுந்தது.
இதுகுறித்து திருவள்ளூர் டவுன் போலீஸ் இன்ஸ்பெக்டர் பத்மஸ்ரீ பபி வழக்குபதிவு செய்து தனுசை கைது செய்தார். மேலும் தப்பி ஓடிய 2 பேரை தேடி வருகிறார்கள்.