உள்ளூர் செய்திகள்

திருக்கல்யாண வைபவம் நடந்தது.

சவுந்தரராஜ பெருமாள் கோவிலில் திருக்கல்யாணம்

Published On 2023-10-16 15:20 IST   |   Update On 2023-10-16 15:20:00 IST
  • புரட்டாசி கடைசி சனிக்கிழமையை முன்னிட்டு திருக்கல்யாணம் வைபவம் நடந்தது.
  • இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.

நாகப்பட்டினம்:

நாகப்பட்டினம் மாவட்டம், வேளாங் கண்ணியை அடுத்த விழுந்தமாவடி கன்னித்தோப்பில் பழமை வாய்ந்த ஸ்ரீ சௌந்தரராஜபெருமாள் கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலில் புரட்டாசி சனிக்கிழமையை முன்னிட்டு திருக்கல்யாணம் வைபோகம் நடைபெற்றது. இதில் ஸ்ரீதேவி , பூதேவி சமேத சௌந்தரராஜ பெருமாள் வசந்த மண்டபத்தில் எழுந்தருளினர். அங்கு சிறப்பு ஹோமங்கள் மாலை மாற்றும் நிகழ்வு, காப்புகட்டுதல் கன்னிகாதாரனம்,வஸ்திரம் சாத்துதல், பூநூல் அணிவித்தல்,நடைபெற்றது.

அதனை தொடர்ந்து கிராம மக்கள் சீர்வரிசை எடுத்துவர பட்டாச்சாரியார்கள் வேத மந்திரம் முழங்க மாங்கல்ய தாரணம் நிகழ்ச்சி நடைபெற்றது அதனை தொடர்ந்து மகா தீபாரதனை காண்பிக்கப்பட்டது இதில் 500 க்கும் மேற்பட்ட பக்தர்கள் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனர்.

Tags:    

Similar News