சித்திபுத்தி தட்சிணாமூர்த்தி விநாயகருக்கு திருக்கல்யாணம் நடந்தது.
மெலட்டூர் சித்திபுத்தி தட்சிணாமூர்த்தி விநாயகர் கோவிலில் திருக்கல்யாணம்
- 7-ம் நாள் நிகழ்ச்சியாக சித்தி, புத்தி தெட்சணாமூர்த்தி விநாயகருக்கு திருக்கல்யாண வைபவம் நடைபெற்றது.
- ஏராளமான பக்தர்கள் தெட்சணாமூர்த்தியை பிரார்த்தணை செய்து கொண்டனர்.
மெலட்டூர்:
மெலட்டூரில் உள்ள ஸ்ரீசித்தி, புத்தி தெட்சணாமூர்த்தி விநாயகர் கோவிலில் விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு நடைபெறும்.
10 நாள் பிரமேற்சவத்தில் 7-ம் நாள் நிகழ்ச்சியாக நேற்று ஸ்ரீசித்தி, புத்தி தெட்சணாமூர்த்தி விநாயகருக்கு திருக்கல்யாண வைபவம் நடைபெற்றது.
இதனை முன்னிட்டு பெண்கள் சீர்வரிசை தட்டு, தாம்பலம் எடுத்து கோவில் வந்தனர்.
அதனை தொடர்ந்து சகல சடங்கு, சம்பிரதாயங்கள்படி சுவாமிக்கு அம்பாள் சித்தி, புத்தியுடன் திருக்கல்யாணம் நடைபெற்றது.
திருக்கல்யாண வைபவத்தில் திருமணமாகாத உள்ளூர் மற்றும் வெளியூரை சேர்ந்த ஏராளமான பெண்கள் கலந்து கொண்டு ஸ்ரீதெட்சணாமூர்த்தியை பிரார்த்தணை செய்து கொண்டனர்.
திருக்கல்யாண வைபவம் மற்றும் பிரமோற்சவவிழா ஏற்பாடுகளை குமார் மற்றும் கிராமவாசிகள் செய்து இருந்தனர்.