கூட்டத்தில் மேயர் சரவணன், துணைமேயர் கே.ஆர்.ராஜூ ஆகியோர் பொதுமக்களிடம் மனுக்கள் பெற்றபோது எடுத்த படம்.
கருப்பந்துறையில் 6 மாதமாக குடிநீர் விநியோகம் இல்லை- மேயரிடம் பொதுமக்கள் புகார்
- புதிதாக கட்டிய குடிநீர் தொட்டியிலும் தண்ணீர் வரவில்லை.
- மழைக்காலம் வருவதற்குள் மழை நீர் வடிகால் கட்டி தர நடவடிக்கை எடுக்க வேண்டும்
நெல்லை:
நெல்லை மாநகராட்சி கூட்ட அரங்கில் இன்று வாராந்திர மக்கள் குறைதீர்க்கும் கூட்டம் நடை பெற்றது.
மேயர் சரவணன் தலைமை தாங்கி பொது மக்களிடம் இருந்து மனுக்களை பெற்றுக்கொண்டார். துணை மேயர் ராஜு, துணை கமிஷனர் தாணுமூர்த்தி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
குடிநீர்
கருப்பன் துறை அம்மன் கோவில் பகுதியை சேர்ந்த பொதுமக்கள் திரண்டு வந்து அளித்த மனுவில், எங்கள் பகுதியில் சுமார் 2,000 குடும்பங்கள் வசித்து வருகின்றனர்.
கடந்த 6 மாத காலமாக குடிதண்ணீர் சரியாக வரவில்லை. புதிதாக கட்டிய குடிநீர் தொட்டியிலும் தண்ணீர் வரவில்லை. இதனால் மிகுந்த சிரமப்படுகிறோம். எனவே சீராக தண்ணீர் விநியோகம் செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறியிருந்தனர்.
வண்ணார்பேட்டை சாலை தெரு பகுதி மக்கள் அளித்த மனுவில், எங்கள் பகுதியில் மழை நீர் வடிகால் கட்டப்படவில்லை. இதனால் மழைக்காலங்களில் தண்ணீர் செல்வதற்கு வழி இல்லாமல் சாலைகளில் தேங்கி கிடக்கிறது. எனவே மழைக்காலம் வருவதற்குள் மழை நீர் வடிகால் கட்டி தர நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறியிருந்தனர்.
நெல்லை மாநகர பகுதியில் கருப்பந்துறை பகுதி யில் ஆற்றங்கரை யோரம் 10-க்கும் மேற்பட்ட சலவைக்கூடங்கள் உள்ளது. இங்கு துணி துவைக்கும் பலர் துணிகளை சலவை செய்ய ஆபத்து விளைவிக்கக் கூடிய வகையில் உள்ள ரசாயனங்களை பயன் படுத்துவதாகவும் இதை தடுக்க வேண்டும் என்று டவுன் பாட்டபத்து பகுதியை சேர்ந்த ராஜன் மனு அளித்தார்.வைக்கப் பட்டுள்ளது. எனவே இது தொடர்பாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறியிருந்தார்.