உள்ளூர் செய்திகள்
நாங்குநேரி அருகே மோட்டார் வயர்கள் திருட்டு
- சுப்பையா ஆயநேரியில் உள்ள பூலம் பஞ்சாயத்திற்குட்பட்ட குடிநீரேற்றும் அறையின் மின் மோட்டாருக்கான வயரை திருடி சென்று விட்டார்.
- இதுபற்றி பஞ்சாயத்து தலைவி முத்துசெல்வி மூன்றடைப்பு போலீசில் புகார் செய்தார்.
களக்காடு:
நாங்குநேரி அருகே உள்ள பூலத்தை சேர்ந்தவர் சுப்பையா (வயது 41). இவர் பூலம் பஞ்சாயத்தில் மின் மோட்டார் ஆபரேட்டராக வேலை பார்த்து வந்தார். இவரது நடவடிக்கைகள் சரியில்லாததால், பூலம் பஞ்சாயத்து தலைவி முத்துசெல்வி அவரை பணியில் இருந்து நீக்கம் செய்தார்.
இதனால் ஏற்பட்ட முன்விரோதத்தில் சுப்பையா ஆயநேரியில் உள்ள பூலம் பஞ்சாயத்திற்குட்பட்ட குடிநீரேற்றும் அறையின் மின் மோட்டாருக்கான வயரை திருடி சென்று விட்டார். இதன் மதிப்பு ரூ.10 ஆயிரம் ஆகும். இதுபற்றி பஞ்சாயத்து தலைவி முத்துசெல்வி மூன்றடைப்பு போலீசில் புகார் செய்தார். அதன் பேரில் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி மின் வயர்களை திருடிய சுப்பையாவை தேடி வருகின்றனர்.