உள்ளூர் செய்திகள்
காட்டுமன்னார்கோவில் தங்கும் விடுதி அறையில் இருந்த 6 ¼ பவுன் தங்க காசு திருட்டு
- தசரதன் தனது மனைவியுடன் கோபித்துக் கொண்டு அதே பகுதியில் உள்ள தனியார் தங்கும் விடுதில் தங்கிக் கொண்டு இருந்தா
- அங்கு வைக்கப்பட்டு இருந்த 6¼ பவுன் தங்க காசினை திடீரென்று காணவில்லை.
கடலூர்:
காட்டுமன்னார்கோவில் பகுதியை சேர்ந்தவர் தசரதன் (வயது 43). சம்பவத்தன்று தசரதன் தனது மனைவியுடன் கோபித்துக் கொண்டு அதே பகுதியில் உள்ள தனியார் தங்கும் விடுதில் தங்கிக் கொண்டு இருந்தார். இந்த நிலையில் தசரதன் வெளியில் சென்று விட்டு மீண்டும் தங்கிய அறையில் வந்து பார்த்தபோது அங்கு வைக்கப்பட்டு இருந்த 6¼ பவுன் தங்க காசினை திடீரென்று காணவில்லை. இதன் மதிப்பு ரூ.3 லட்சம் ஆகும். இது குறித்து காட்டுமன்னார்கோவில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.